Showing posts with label லாப சனி. Show all posts
Showing posts with label லாப சனி. Show all posts

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பம். இரண்டரை வருடம் ஜாலி தான்...

லாப சனி என்றால் என்ன?

  • ஒருவரின் ஜனராசிக்கு கோசார சனி எங்கு இருக்கிறதோ அதை பொறுத்து நல்லது அல்லது கெட்டதை செய்வார் என்று சொல்லபடுகிறது. மேலும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த சனியை ஒரு குறிப்பிட்டு பெயரை வைத்து அழைப்பார்கள்.  உதாரணத்திற்கு சனி 1ம் வீட்டில் இருந்தால் ஜன்ம சனி என்பார்கள்.
  • அதேபோல் லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 11ம் வீட்டில் சனி இருப்பதை  லாப சனி என்று சொல்வார்கள்.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, அதிக லாபம் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, பணம், உயர்வு ஆகியவற்றைத் தரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • பொதுவாக சனி லாப ஸ்தானத்தில் இருக்கும் போது, அதிக நன்மைகளைத் தருவார் என்றும் அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகமாக தருவார் என்றும்  கூறப்படுகிறது.
  • சனி பகவான் எந்த ராசியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்கள் மாறுபடும்.
  • இந்த வருட சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு லாப சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. 

பொது  கண்ணோட்டம்

  • ரிஷப ராசியை பொறுத்த வரை, 10யில் இருக்கும் சனியால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். மேலும் குருவும் ராசியில் நின்று சில பல சோதனைகளை கொடுத்தார் என்றால் அது உண்மை தான். அது எல்லாம் மாறும் கால வருகிறது.
  • சனி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதி கொண்ட ரிஷப ராசிக்கு, 11ம் விட்டிற்கு சனி பெயர்ச்சியாவது மிகவும் நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.
  • இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும், சனிப்பெயர்ச்சிகளில் ஏதாவது   ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த 2025ம் ஆண்டு நடக்க இருக்கும் சனி  பெயர்ச்சி நல்லது செய்ய இருக்கும் ராசியில் ரிஷப ராசி முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவதற்கும் சற்று நாட்கள் ஆகும். அதாவது குறைந்த பட்சம் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும்.
  • உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் உறவுகளில்   நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். மேலும்  தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அத்துடன் புதிய வீட்டை வாங்குவதற்கும் மாற்றுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும், பயன்பாடுத்து கொள்ளவும்.  நீண்ட கால ஆசைகளும், கனவுகளும் நனவாகும்.
  • பொதுவாக சொன்னால், ஜூன் 2025 முதல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை தரும். மேலும்  ஜூன் 2025 முதல் மே 2026 வரையிலான காலம் நல்ல  அதிர்ஷ்டத்தைத் தரும் எனலாம்.
  • இந்த சனி பெயர்ச்சியில், சனி பகவானின் அருளால் அனுகூலமான பலன்களைப் பெறுலாம்.
  • நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த பணமும் இந்தக் காலத்தில் கிடைக்கக்கூடும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
  • சனி தனது 3, 7 , 10 பார்வையாக முறையே ராசி, ஐந்தாம் வீடு மற்றும் எட்டாம் வீடு பார்ப்பர்.  கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும். மேலும்  குழந்தைகளைப் பற்றி  சில கவலைகள் இருக்கலாம்.
  • என்றாலும் ரிஷப ராசிக்கு சனி யோகதிபதி ஆவார். அவர் 11ம் வீட்டிற்கு வருதால்,   வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். நீண்ட பயணங்கள் மூலம்  பணி நிறைவேறும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வந்த வேலை எல்லாம் நல்ல படி நடக்கும்.
  • பதினொன்றாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும் இந்த இடையூறுகள் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.
  • அடுத்து வரும் இரண்டு வருடங்கள், இந்த லாப சனி பெயர்ச்சியால், ரிஷப ராசிகாரர்கள் எடுக்கும் நல்ல முயற்சி,   பெரிய  முழுமையான  வெற்றி கிடைக்கும் என்பது திண்மம்.

குடும்ப வாழ்க்கை

  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2025 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2026 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும் மேலும் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
  • நிதிநிலை பொறுத்துவரை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு ஏற்படலாம்.
  • திருமண வயதில் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும் இது திருமணத்திற்கு ஏற்ற காலம் இது ஆகும்
  • குழந்தை பாக்கியத்தை எதிர் நோக்கி காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  • ரிஷப ராசிகாறரால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்தி கொள்ளவும்

ஆரோக்கியம்

  • மார்ச் 29 2025 அன்று சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் 11வது வீட்டிற்குள் நுழைந்தவதால் ஆரோக்கியத்தை பொறுத்து சாதகமான மாற்றங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2025 மாதங்களில், படிப்படியாக ஆரோக்கியம் ஸ்திரத்தன்மை பெறும்.
  • கடந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழு குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுபடுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சி உண்டாகும் . பொதுவாக, இந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.
  • ஜூன் 2026 ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் பெரிய பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
  • ஜூன் 2027 க்குப் பிறகு சிறந்த காலம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்த மனக்குழப்பங்கள் முற்றிலும் நீங்கி, மனதில் அமைதி நிலவும்.
  • பொதுவாக இந்த இரண்டரை வருடங்களை பொருத்தவரை ரிஷப ராசிகாரர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • சொந்த தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தலாம் அதற்கு இந்த சனி பெயர்ச்சி உதவும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாகவே இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்து நல்ல செய்தி வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரணையால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்
  • சொந்த தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தலாம் அதற்கு இந்த சனி பெயர்ச்சி உதவும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாகவே இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்து நல்ல செய்தி வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரணையால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்
  • உபரி வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும். கால்நடை வளர்ப்பு மற்றும் கல்வித் துறையில் ஈடுபடுவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் காணலாம்.
  • அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் அதிகரிப்பு ஏற்படலாம். நீதிமன்ற வழக்கு ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல லாபம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்து வந்த சோர்வு நீங்கி, விளைச்சல் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்
  • கலைத்துறையில் இவர்கள் இது வரை எதிர்கொண்டு வந்த சவால்கள் மற்றும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிந்தனை தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது விவேகமாக செயல்பட வேண்டும்.

பரிகாரம்

  • இந்த நேரத்தில் ஆன்மீக ஆதரவைத் தேடுவது மிகவும் நன்மை பயக்கும். சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வதும், லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது அலல்து கேட்பதும் மிகவும் நல்லது.
  • மேலும் கால பைரவர் அஷ்டகம் படிப்பது அல்லது கேட்பது மன ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும்.
  • சனிக்கிழமை விரதம் இருந்து கணபதி, அனுமன் மற்றும் சனி பகவானை வழிபடுவது நல்லதை விரைவில் கொண்டுவர உதவும்.
  • முடிந்தவர்கள் சனிக்கிழமை அன்று அன்ன தானம் செய்யலாம். மேலும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்யலாம் .
  • செவ்வாய் கிழமைகளில் துர்க்கை வழிபாடு செய்து வர, தைரியம் அதிகரிக்கும்.