இந்த வருடம் - 2025 குரு பெயர்ச்சி எப்போது?
குரு பெயர்ச்சி பொது பலன்கள்
ஏழரை சனி ஆரம்பிக்கும் போது இந்த பெயர்ச்சி வருவதால் சற்று சிரமங்கள் இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்
மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டுக்கும் பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். அவர் முன்றாம் வீட்டுக்கு செல்வதால் சோம்பல் அதிகரிக்கும்சோம்பல் அதிகரிக்கும்.
என்றாலும் நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நிறைவேறும்.
திட்டமிட்ட செயல்களால் வருமானம் அதிகரிக்கும். மத விஷயங்களில் மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் சாத்தியமாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் மிகவும் அவசியம். என்றாலும் எல்லா விஷயங்களிலும் கவனம் மிகவும் அவசியம். ஏழரை சனி ஆரம்பித்து விட்டதை நினைவில் வைத்து கொள்ளவும்.
அக்டோபர் 19 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் பூஜை அல்லது திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம்.
டிசம்பர் மாதத்தில் குரு மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் செல்வதால் உடன்பிறந்தவர்களுடன் கசப்பு ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் நடத்தையில் சில தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
குரு பார்வையின் பலன்கள்
3ம் வீட்டில் இருக்கும் குரு தனது 5, 7,9ம் பார்வையாக முறையே ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடுகளை பார்க்கிறார். இது மிகவும் நல்லது , முயற்சி, தைரியம் மற்றும் சகோதர ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் 7ம் வீடான களத்திர ஸ்தானத்தையும் 9ம் வீடான தகப்பனார் ஸ்தானத்தையும்,
மேலும், 11ம் வீடான லாப ஸ்தானத்தையும், பார்ப்பது மிகவும் சிறப்பு எனலாம்
ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடு, பதினொன்றாம் வீடுகளில் குரு பகவானின் பார்வை இருப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். பரஸ்பர உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குரு பார்வை மிக நல்ல பலன்களை தான் தருகிறது.