Showing posts with label சுப சேர்க்கை. Show all posts
Showing posts with label சுப சேர்க்கை. Show all posts

கடக லக்கினத்தின் பொது பலன்கள்

 



2க்கு  உரியவனாகிய சூரியன் கொல்லான்.

சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்வது நல்லது அல்ல.

 கடகம் லக்கினம்- சுப சேர்க்கை

      • சூரியன்+சுக்கிரன் 
      • சூரியனை சுக்கிரன் பார்த்தல் 
      • சுக்கிரனை சூரியன் பார்த்தல் 
      • சுக்கிரன் சூரியன் நட்சத்திரம் ஏறுதல் 
      • சூரியன், சுக்கிரன் நட்சத்திரம் ஏறுதல் 
  • கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும் 
  • மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு  அசுபராக  வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

பொது பலன்கள் 

  • தனவான் , பிதாவுக்கு அடங்காதவன், குரு விசுவாசி, கபடம் உள்ள அவமானான களத்திரகாரகன், தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை உடையவன், அற்ப புத்திரன் உடையவன்.
  • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அப்படியே நண்டுப் பிடியாகப் பிடித்துக்கொள்வார்கள். கூர்மையான பார்வை கொண்ட இவர்கள், விடாமுயற்சி, பிடிவாதம் கொண்டிருப்பார்கள். தெளிந்த அறிவும் சிந்திக்கும் திறனும் மிக்கவர்கள்.
  • நண்டு சின்னம்: நண்டின் தன்மை அது தன் எல்லா குட்டிகளை அரவணைத்துப் போல இந்த கடக லக்கின ஜாதகர்கள் அதிக பாசக்காரர்கள் மற்றும் அன்பால் அரவணைப்பவர்கள்.
  • "மாற்றானுக்கு இடம் கொடேல்’ (Never let your enemy to hurt and succeed you) என்றொரு பழமொழிக்கு ஏற்ப இந்த லக்கின காரர்களை மெல்லத் தன்னை நுழைத்துக்கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள்.
  • “நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். தன் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலைகளை கற்று மாறிக்கொண்டு இருப்பார்கள். 
  • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையானவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள்.
  • வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
  • கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும். 
  • பெரிய பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். தானம் தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். 
  • செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள்
  • நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் . இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி போகவே இருப்பார்கள். சிலசமயங்களில், இவர்கள் தைரியம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பர். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள். ஆனால் இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
  • இவர்கள் தண்ணீரில் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். தண்ணிரால் உடல் நலம் சிலருக்கு பாதிக்கும் 
  • செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பர். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலைகளிலும், இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். எதையும் ஆர்வமுடன் கற்பார்கள்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

கடக லக்கினம்

கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு

கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி

வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து

வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே

சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க

சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு

கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா

கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே


பொருள்:

இப்பாடலில் கடக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் தீய பலனையே தருவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். “

 விளக்கம்:

கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீய பலன்களைத் தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரஜித்தும்  இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவப்பரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது

குறிப்பு:

கடக லக்கினத்திற்கு 4, 11 உடையவர் சுக்கிரன் என்றாலும் சுக்கிர தசா புத்தி களத்தில் நல்லது செய்ய மாட்டார். 5, 10 க்கு உரியவர் செவ்வாய் என்றாலும் செவ்வாய் இங்கு நீசம் அடைகிறார். 

சுக்கிரன் இவர்களுக்கு மிகுதியான தீய பலன்களைத் தருவார். ஆயினும் சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானம் ஆகிய 1, 5 யில் நின்றால்  மிகவும் நல்லது.  மற்ற எந்த இடத்தில் சுக்கிரன் இருந்தாலும் நல்லதல்ல.


திருமண வாழ்க்கை

  • 7, 8க்குடையவர்  சனி. திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது.
  • வழக்காடுவதில் வல்லவர்களாக இவர்களின் வாழ்க்கைத் துணை அமைவார்கள். மேலும் கொண்ட கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள்.
  • இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும்.
  • திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவராக இருப்பார்கள்.
  • மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி – லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார்.
  • திருமணம் ஆனவுடன் சிலருக்கு மாமனாரே நல்ல வேலை வாங்கிக் கொடுத்தோ அல்லது வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தோ பெருமைப்படுத்துவர்.
  • ராசிக்கு 7 – ஆம் அதிபதியான சனி உச்சமானால் , நல்ல சுகபோகத்துடன்- நிறைந்த கௌரவத்துடன் எல்லாரும் வந்து பணிவுடன் பேசும் அளவுக்கு பெரிய மனிதத்தன்மையோடு இருப்பர். ஆனால் நீசமானால் திருமணம் ஆனவுடன் வேலை போய் , கெளரவம் இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள்.

தொழில்

  • தனக்காரகன் செவ்வாய் என்றாலும் கடகத்தில் செவ்வாய் நீசம் ஆகிறார். ஆனாலும் செவ்வாய் யோககாராரே.
  •  கடன் கொடுத்தவர்களிடமிருந்து பேசி மீண்டும் பணத்தை திரும்பப் பெறும் திறன் உங்களுக்கு இருக்காது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்
  • எந்த வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாகவும் அழகுணர்வோடும் செய்து முடிப்ப்பார்கள். மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். 
  • கடல் சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். சரித்திரம் சார்ந்த பதிவுகளை துல்லியமாக எழுதும் திறமை உடையவர்களாக இருப்பீர்கள். எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், நடிக நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் உங்களால் ஜொலிக்க முடியும். 
  • ஐந்து, பத்துக்குடையவராக, ஒரு கோணத்திற்கும், கேந்திரத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் செவ்வாய் இருக்கிறார். மற்றும் சூரியன், சந்திரன், குரு மூவரும் ஆகிய கிரகங்களின் பலம், பார்வை ஏற்பட்டால் தொழிலில் பல சாதனைகள் செய்யும் யோகம் உண்டாகும்.
  • மருத்துவம்,ஆன்மீகம், சினிமா போன்ற துறைகளில் சாதித்தவர்கள் பெரும்பாலும் கடக லக்னத்தில் பிறந்தவர்களே 
  • லக்னாதிபதி பலம் பெற்றால் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் மந்தமான முன்னேற்றம். பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள் 
  • 2மிடத்து அதிபதியாக சூரியன் வருவதால் அரசு மற்றும் அரசியல் லக்னம் என்றே குறிப்பிடலாம்.  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசினோடு எந்தவிதத்திலாவது தொடர்பினை வைத்துக் கொள்ள நேரிடும். 
  • 10மிடமாக செவ்வாய் வீடு வருவதும் ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்கு செவ்வாய் பலமான உதவிகளை செய்து விடுகிறார். பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.
  • மேலும் அழகு மற்றும் பேஷன், வங்கி மற்றும் நிதி, உயிரியல் மற்றும் தாவரவியல் துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
  • சூரியன், புதன் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் அரசு பள்ளியில் கணித ஆசிரியர், அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரி போன்ற பணிகளின் மூலம் வருமானம் உண்டாகும்.
  • சூரியன் செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் பத்திரப்பதிவுத்துறை, அரசு சட்டக் கல்லூரி, பேராசிரியர், காவல்துறை, ராணுவம் அரசு கிடங்கு மற்றும் குழந்தைகள் தொடர்பான தொழில்கள், அரசு மருத்துவமனை பணி போன்ற வேலைகளில் மூலம் வருமானம் ஏற்படும்.

கிரகங்கள்  

சூரியன் : சூரியன் நட்புடன் 2-க்குரியவராகவும் தனம், வாக்கு தன்மையும் மற்றும் நேத்ரம் தொடர்பான வேலைகளை செய்வார்.

சந்திரன் : 2ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் சமம் நிலை அடைகிறார். இவர் மாராகதிபதி என்று சில நுல்களும், கொல்லான் என்று சில நுல்களும் சொல்கின்றான. ஆனாலும் அவர்களின் திசை, புத்தியில்  மாரகத்திற்கு ஒப்பான பாதகம் உண்டாக்கும் .
புதன் : இவர்  3 மற்றும் 12 க்கு உடையவர். நல்லவர் அல்ல. தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள் 
செவ்வாய்: செவ்வாய் 5,10-க்கும் உரிய இவர் பூர்வ புண்ணியம் கர்மகாரகனாகவும் இருப்பார். இந்த இடத்தில் செவ்வாய் ஒரு கேந்திரதிபதியாகவும் திரிகோணாதிபதியாகவும் இருந்து ராஜ யோகாதிபதியாகவும் செயல்படுவார்.
குரு: குரு ஆறுக்கும் ஒன்பதுக்கு உரிய வேலையான நோய், கடன், மற்றும் பாக்கியத்தை தருபவர். 
சுக்கிரன்: சுக்கிரன் 4, 11-கும் உரியவர். சுகத்தையும் லாபதிபதியாகவும் செயல்படுவர் இருந்தாலும் சுக்கிரன் தன் தசா புத்திக்காலங்களில் பாதகத்தை செய்வார்
சனி: சனி 7, 8, க்கு உடையவர். பகை ஆவரர். தசா புத்திக்காலங்களில் மாரகத்திற்கு சமமான பாதகத்தை தருவார்கள் 

சூட்சுமங்கள்  

  • இவர்களுக்கு குரு , செவ்வாய் யோகமானவர்கள் ஆனால் செவ்வாய் கடகத்தில் நீசம் ஆகும். 
  • சனி 7 மற்றும் 8 உடையவர் என்றாலும் அவரே மராகாதிபதி ஆவார். 
  • சுக்கிரன் வீட்டில் தான் சந்திரன் உச்சம் அடைகிறார். ஆனாலும் சுக்கிரன் பகையே.
  • சந்திரன் நீசம் அடையும் வீடு விருச்சிகம். ஆனால் செவ்வாய் யோககாரகன். எனவே சந்திரனின் நீசத்தை அதிகமாக கணக்கு எடுத்து கொள்ளவது இல்லை.
  • சந்திரன் வளர்பிறை என்றால் நல்ல பலனையும் தேய்பிறையானால் தீய பலனையும் தர வல்லவர். 
  • கடக லக்கினகாரர்களுக்கு எங்கு சந்திரன் நின்றாலும் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூற்கின்றன 
  • .

தசா பலன்கள் - சூரியன் 

கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திரன் சூரியன் சமம்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • சூரியன் 2க்கு உடையவர்.   அரசியல் தொடர்பு சிறப்பாக இருக்கும் 
  • குடும்ப நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
  • பொருளாதாரம் மேன்மை அடையும். புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
  • கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
  • செல்வாக்கு அதிகரிக்கும்.தனச்சேர்க்கை உண்டாகும்.
  • உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்
  • கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
  • சூரியன் தந்தைக்காரகன் என்பதால் தந்தையின் பாசம் அபரிமிதமாக இருக்கும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். மன தைரியம் அதிகரிக்கும் 
  • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
  • செய்யும் செயல்களால் கீர்த்தி அதிகரிக்கும்.  வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • குடும்ப நபர்களிடம் ஆதாயமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
  • ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
  • சந்திரன் பலம் குறைந்து தன் தசாவையோ, புத்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் கொடுக்கும்
  • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

தசா பலன்கள் -  செவ்வாய் 

கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • கடகத்தில் செவ்வாய் நீசம் அடைந்தாலும் அவர் 5 மற்றும் 10 க்கு உரியவர். ஆதலால் அவர் நன்மையே செய்வார்.
  • திருமணத்திற்கு காத்திருபவர்களுக்கு  திருமணமும், திருமணமானவர்களுக்கு குழந்தை பேரும் உண்டாகும். மேலும் குழந்தைகளால் மகிழ்ச்சி, பெருமை உண்டாகும்.
  • அதிஷ்டம் நல்ல வழியில் கிடைக்கும். 
  • படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலைக்கு செல்வபவர்க்கு பதிவி உயர்வு, எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும்.
  • தொழில் செய்பவருக்கும் மிக நல்ல பலனே நடக்கும் 
  • கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
  • செவ்வய்யுடன் சுபகிரகம் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் மிக நன்றாகவே இருக்கும்
  • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
தசா பலன்கள் -  புதன் 
    கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சந்திரன் புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • புதன் கடக லக்கினத்திற்கு 12, 3ஆம் அதிபதி மேலும் பகை கிரகம். நல்லது செய்யாது. இது யோகமில்லாத கிரகம் ஆகும் .
    • கடக புதன் எந்த ஒருவரை எதிலும் உயர் நிலையை எட்ட விடுவதில்லை. அதனால் கடக லக்கினகாரர்களுக்கு புதன் திசை மோசமான திசை என்ற சொல்லாம்.புதன் நல்ல இடத்தில் இருக்கும் பட்சத்தில் பிரச்சனை குறையும்.
    • புதன் திசையில் பிரச்சனை தருவதுடன் சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பு அதிகம் கவனம் கட்டாயம் தேவை.  
    • புதிய முயற்ச்சிகள் எடுக்க தோன்றும். ஆடம்பரத்தை மனம் விரும்பும் 
    • கலையில் ஆர்வம் பிறக்கும். அந்த துறையில் இருப்பவருக்கு சிலருக்கு நமை உண்டாகும்.
    • நல்லது, கெட்டது, நல்லவர், கெட்டவர் புரிந்து கொள்விர்கள். அனுபவத்தால் தான் சில விசயங்கள் புரியம் 
    • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

     தசா பலன்கள் -  குரு  

      கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
      • இவர்  6 மற்றும் 9 க்கு உரியவர். குரு நட்பு கிரகம். குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார்.  கடக லக்கினகாரர்களுக்கு குருவும்  செவ்வாயும் யோகாரார்கள் ஆவார் .
      • கடக லக்னத்துக்குப் பாக்கியாதிபதியாக அமைந்து யோகம் தருவார் 
      • உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
      • வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
      • வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும். தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும். 
      • வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் 
      • கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு அது சுப செலவாகவும் இருக்கலாம். 
      • 6க்கு உடையவர் என்ற வகையில் சில பிரச்சனைகள், கடன்கள் உண்டாகும் ஆனாலும்  செல்வம் அதிகரிக்கும்  
      • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

      தசா பலன்கள் - சுக்கிரன்  

        கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • கடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காம் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபராக வருகின்றார். அதாவது சுகாதிபதி மற்றும் லாபாதிபதி ஆக வருவார். ஆனாலும் கடக லக்கினாதிபதி சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகையானவர்கள் 
        • கடக லக்கினக்காரர்களுக்கு ஏழாம் இடமாகிய மகர ராசியில் சுக்கிரன் இருந்து தசை நடத்தினால் களத்திர தோஷத்தை ஏற்படுத்துவார் 
        • கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக்பலமும் பெறுவார் என்பதால் இது ஒரு கூடுதலான நன்மைகளை  தரும் என்றாலும் சுக்கிரன் இந்த இடத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்படுவார் என்பதால் என்னதான் யோகம் செய்தாலும் சில நெருடல்களும் இருக்கும். மேலும் கடக, சிம்ம லக்னங்களுக்கு  நல்ல நிலைகளில் இருந்தாலும் சுக்கிரன் மனப்பூர்வமாக நன்மைகளைச் செய்வது இல்லை.
        • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

        தசா பலன்கள் - சனி 

          கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
          • கடக ராசி லக்னத்திற்கு சனி ரொம்ப நல்லவர் கிடையாது. மேலும் இவரே மராகாதிபதியும் ஆவார்.
          • சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது  தலைமை பதவியை சனி தருவார். 
          • அஷ்டமாதிபதி இருக்கும் சனியால் சற்று கடும் பலன்கள் இருக்கும் என்று சொல்ல முடியும்  
          • திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
          •  எட்டுக்கு  உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது. 
          • சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
          • வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்  
          • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் -  ராகு  

            கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
            • சந்திரனுக்கு  ராகு பகை. இவர்களுக்கு ராகு திசை நல்ல திசை இல்லை . 
            • முதல் சில வருடங்கள் மிகுந்த போராட்டமாகவும், அலைச்சல் மிகுந்தாகவும் இருக்கும்.
            • உடல் நலனில் அக்கறை கட்டாயம் வேண்டும் 
            • ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. குடும்பம் பொருத்தவரை முன்னேற்றமாக தான் இருக்கும். வீடு , வீடு சார்ந்த விசயங்களும் நன்றாகவே இருக்கும் 
            • குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும் 
            • தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
            • இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
            • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  கேது  

              கடக லக்னத்திற்கு அதிபதி சந்திரன் . கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சந்திரனுக்கு  கேது  பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை . 
              • கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும்  செய்வார்.
              • சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
              • வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
              • சுப வீடுகளில் கேது அமர்ந்து இருந்தால் ஞானிகள் தரிசனம் ஆன்மீக பயணங்களை ஏற்படுத்துவார்.
              • ஆனாலும்  இந்த திசை காலத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
              • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              கடகம் லக்கினம்  – நட்சத்திரம் 


              கடக லக்கினத்தில்  உள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்   ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
              அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்  

              கடகம் லக்கினம்  – புனர்பூசம் - 4  

              புனர்பூசம்  4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.
              புனர்பூச நட்சத்திரம் குருவின் ஆதிக்கம் கொண்டது.  இந்த நட்சத்திர பாதத்தில் கிரகங்கள் வர்கோத்தமம் பெரும். குருவானவர் குருவின் சாரம் கொண்ட விசாகம், புரட்டாதி, புனர்பூசம் நான்காம் பாத காலில் நின்றாள் வாழ்வில் முக்கால் சதவீதம் ஜாதகர்கள் உச்சம் பெற்றவராக இருப்பார்கள் இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், செயலில் உறுதிமிக்கவர், மனம் மற்றும் உடலில் வீரம் குறைவாக இருக்கும், தெளிவான குணம் கொண்டவர்கள், களத்திரத்தில் கொஞ்சம் பிரச்னை உண்டு, அழகான உடல் அமைப்பு உடையவர்கள், பாராட்டுமிக்கவர்கள், சிலருக்கு தந்தை வழியில் பொருள் ஈழப்பு உண்டு, பூர்விக சொத்துகள் நீண்ட நாட்கள் பிறகு கிடைக்கும், அரசு சார்ந்த உதவி கிட்டும், படிப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர், விஞ்ஞானத் துறையில் மற்றும் ஆராய்ச்சில் சிறந்து விளங்குவார்கள்.

              கடகம் லக்கினம்  – பூசம்  

              பூசம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சனி , சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

              பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்டது. பூசம் நட்சத்திரத்தில் லக்கினம் அமையப்பெற்றவர்கள் புத்திக்கூர்மை, அதிக நினைவாற்றல் மிக்கவர்கள், மற்றவர் சொல்லுவதை மனதில் உள்வாங்கிக்கொள்பவர்கள், நின்று நிதானமாக செய்பவர்கள், அமைதியானவராகக் கட்டிக்கொள்வார்கள், சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். கோபக்காரர்கள், கொஞ்சம் திருட்டுத் தனம் இருக்கும், பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள், பொலிவுமிக்கவர்கள், அழகானவர்கள், மாற்றி மாற்றி பேசுவார்கள், சந்தனம் போன்ற இயற்கை வாசனை விரும்பிகள், பசி தாங்கமாட்டார்கள், படிப்பு கொஞ்சம் மந்தம், நிறைய பேறு பெற்றவர்கள், நல்ல பண்பு மிக்கவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள்


              கடகம் லக்கினம்  – ஆயில்யம்  


              ஆயில்யம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் புதன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார்.

              ஆயில்யம் புதனின் ஆதிக்கம் கொண்டது. இந்த நட்சத்திர காலில் லக்கினம் அமையப்பெற்றால் மதி நூட்பமாக பேசுபவர்கள், பகைவர் என்றாலும் பாசமாக நடத்துவார்கள், தாய் தந்தையாருக்கு பிடித்தமாதிரி நடப்பவர்கள், கடவுள் பக்தி கொண்டவர்கள், கவலையாக இருப்பார்கள், கானகங்களில் சஞ்சரிப்பார், மென்மையான மனமுடையவர்,  கல்வி கற்பதில்  விரும்புவீர்கள், சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் வறியவன் போல் அற்பமாக சாப்பிடுவார்கள், எல்லாரையும் பரிகாசம் செய்வான், ஆற்றல் மிக்கவராய் கண்டு அஞ்சமாட்டேன், பேசுவதில் நகைச்சுவை தன்மை இருக்கும், திட்டமிடுதல் மூலம் எதிர்காலத்தைக் கணிப்பார்கள், குடும்பத்தாரை நேசம் கொண்டவர்கள், சரளமாகப் பேசுபவர்கள், உடல் மற்றும் மன வலுமைமிக்கவர் அழகான கண்புருவங்கள் உடன் பொலிவான தோற்றம் இருக்கும்  என்றெல்லாம் பல்வேறு நூற்களின் வாயிலாக கூறப்பட்டுள்ளது.

              மந்திரம் 

              கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய நரசிம்மர் துதி மனதார சொல்லி வருவது நல்லது 

              அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
              அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
              தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
              துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
              மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
              ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
              வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
              பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !

               

              ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



              ரிஷப லக்கினத்தின் பொது பலன்கள்

               


              அதிபதிசுக்கிரன்
              யோககாரகர்கள்சூரியன், சனி, புதன்
              யோகமில்லாதவர்கள்குரு, சந்திரன்
              மாரக அதிபதிசந்திரன்,குரு , செவ்வாய்
              நோய்காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
              ஆயுள்சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

              சனி ஒருவனே நல்ல ராஜயோகத்தை தருவார்

              சில ஜோதிட நுல்கள் சந்தரன், குரு, செவ்வாய் கொல்லான் என்றும் கூருகிறது

              ரிஷபம் லக்கினம்- சுப சேர்க்கை

              • சூரியன்+புதன்
              • சூரியன்+சனி
              • சூரியன்+சுக்கிரன்
              • புதன்+சுக்கிரன்
              • புதன்+சனி
              • சுக்கிரன்+சனி

              ரிஷபம்  லக்கினம்- ஆகாத தசைகள் 

              • இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.
              • 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
              • சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன். சூரியன் 4க்குடையவன் ஆகிலும் அசுபனே.
              • செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன். குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்

              பொது பலன்கள் 

              • சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். 
              • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்
              • எருது சின்னம்:  கிருத்திகை -2, 3 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் -1, 2 பாதங்கள் வரை - வானவெளி கூட்டத்தில் எருது  உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். 
              • ரிஷப லக்கினகாரர்கள் எருதின் அமைப்பும் மற்றும் ஸ்திர தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், குனிந்தும், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், தோல்கள் கடினத்தன்மையும், மெதுவான நடையும், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும், நெற்றி அகன்றும் காணப்படும். இதுதவிர பஞ்ச பூதங்களில் பிருத்வி(நிலம்) தத்துவத்திலும் ரிஷப லக்கின ஜாதகர் குணநலன்கள் பார்த்தால் பேச்சில் தேனாகவும், வசீகரத் தோற்றம் இருக்கும்
              • ரிஷப லக்கினகாரர்கள் முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன்
              • ரிஷப லக்கினகாரர்கள் ஸ்திர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு நிதானம் உறுதியும்  இருக்கும். மேலும் இது நில ராசி ஆகும் 
              • கடின உழைப்பாளியாகவும், கோபம் தெரியாவண்ணம் இருக்கும். ஆனால் கோபம் அதிகமானால் அவர்கள் செயல் அதிரடியாக இருக்கும்..
              • அலங்காரப்பிரியராகவும், அழகும் கவர்ச்சியும், கலைநயம் கொண்டவராகவும், சரியான நேரத்தில் அறிவானது வெளிப்படும், ஞாபகசக்தி,  சகிப்புத் தன்மை, பிடிவாத குணம்,  மெதுவாக சாத்வ குணமாக தெரியும், எதிராளி பேசுவதை கவனமாக கேட்பார்கள்.
              • சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், உணவு குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க் கீழே வேலை செய்பவன், புளிப்பு இவர்களுக்குப் பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் இருக்கும், பேராசை கொண்டவன், இருமல், கபம், கழுத்தில் வியாதி இவருக்கு இருக்கும் , மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று ஜாதக அலங்கார  நூலில் கூறப்படுகிறது.
              • நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர். அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.

              புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

              ரிஷப & மிதுன லக்கினம்

              கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

              கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

              ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

              அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

              கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

              கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

              தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

              தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


              பொருள்:

              இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

              “ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

               விளக்கம்:

              அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


              திருமண வாழ்க்கை

              • ரிஷப லக்னத்தின் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய். இவர்களுடைய இல்லற வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது. செவ்வாய் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார்.  செவ்வாய் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும்  செய்வார்
              • இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
              • இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
              • ரிஷப லக்கினக்காரருக்கு, விருச்சிக ராசி ஏழாமிடமாக அமைவதால் முழுப் பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல், வீண் தகராறுகள் விளையும்.
              • இவர்களின் வாழ்க்கை துணை பொதுவாக நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார். ஆனாலும் சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

              தொழில்

              • இவர்கள் நளின உழைப்பினர். சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
              • உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
              • பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
              • உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
              • இவர்கள் இடைத்தரகர் போன்ற தொழில் செய்தால் அந்தத் தொழிலில் இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. பேச்சுத் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட விஷத்தையும் பேசியே ஜெயித்து விடுவார்கள். 
              • பொதுவாக அரசுத்துறையில் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்
              • ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் 9ம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவான் ஆவார். ரிஷப லக்னத்திற்கு 9 ஆம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பெரிய பாதகங்களை செய்ய மாட்டார் ஏன்னென்றால் ரிஷப லக்னாதிபதி சுக்கிரனுக்கு இவர் தீவிர நண்பர்,  அதனால் ரிஷப லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, புகழ், அதிர்ஷ்டங்கள், முன்னேற்றத்தையும் தரவல்லார்.
              • அறிவிப்பாளர், பொது பேச்சாளர் (Public speaker), வரவேற்பாளர் (Receptionist), கணக்காளர் (Accountant), கல்வியாளர், என்ஜினியர் (Engineering), வக்கீல் (Lawyer), வடிவமைப்பாளர் (Designer), நிலம் தொடர்பான வேலை, சமையல் தொழில் (culinary profession) ஆகியவை சிறப்பாக இருக்கும். 
              • பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பது கூடாது (நல்ல கூட்டாளிகள் அமைப்பு இல்லை)

              கிரகங்கள்  

              • சூரியன் : 4ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் நல்லவர் ஆனாலும் சுக்கிரன் & சூரியன் பகைவர்கள் அனைவரும் அறிந்தே. சூரியனின் பகை வீடுகளில் ரிஷபம் ஒன்றாகும். எனவே சூரியன் இவர்களுக்கு அவ்வளவு நன்மை செய்யாது 
              • சந்திரன் : 3ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் இங்கு உச்சம் அடைகிறார். ஆனாலும் சந்திரன் பகைவரே. இவர் மாரகதிபதி ஆவார். சந்திர திசையில் மரகத்திற்கு ஒப்பான கெடுதலை செய்வார் 
              • புதன் : இவர்  2 மற்றும் 5 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். சனியை போல் இவரும் நன்மையே செய்வார்.
              • குரு: இவர்  8 மற்றும் 11 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
              • சுக்கிரன்: சுக்கிரன் லக்கினாதிபதியும் 6க்கு உடையவரும் அவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
              • சனி: ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவரே நல்லவர் என்று சில நூல்கள் சொல்கிறது. 
              • ராகு & கேது : ரிஷப லக்னத்திற்கு ராகு & கேது நல்லவரே. ஆனாலும் ராகு தான் கேதுவை காட்டிலும் நல்லவர் 

              சூட்சுமங்கள்  

              • ரிஷப லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள்  என்றால் புதன், சனி மற்றும் சுக்கிரன் 
              • சந்திரன் ரிஷபத்தில் உச்சம் அடைந்ததாலும் இவர் மராகாதிபதி ஆவார். 
              • மீனத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்தாலும் குருவும் மாராகதிபதி ஆவரர்.
              • சுக்கிரன் நல்லவர் என்றாலும் 6க்கு உடையவரும் ஆவரே.
              • குரியனும் பகைவரே ஆவார்.  

              தசா பலன்கள் - சூரியன் 

              ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன் . சுக்கிரனுக்கு சூரியன் பகை.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
              • சூரியன் நல்ல ஆதிபத்தியம் பெற்று சூரிய தசை நடக்கும் என்றால் மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.
              • மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். 
              • உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். 
              • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும் 
              • விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும் 
              • அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

               தசா பலன்கள் - சந்திரன் 

                ரிஷப  லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்கு  சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • 3ம் அதிபதி என்பதால் சந்திரன் அமையும் இடத்தைப் பொறுத்து சாதகமான பலனை உண்டாக்குவார். 
                • ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால் வர்த்தகத்தில் சிறு சிறு பிரச்சினை உண்டாகும்
                • காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். 
                • மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
                • சிறு தூர பயணம் ஏற்படும். அது நல்ல விதமாக இருக்கும் 
                • தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். பகைவர்களால் பிரச்சனைகள் இருக்கும். மிகவும் கவனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம் 
                • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  செவ்வாய் 

                  ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன், செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 7க்கு உடைவன்  . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                  • வாழ்க்கை துணையின் தாய்வழியில் சொத்துக்கள் கிடைக்கும். லாபம் உண்டு  
                  • குழந்தகைளை ஜாக்கிரதையாக பாத்துக்கொள்ள வேண்டும். 
                  • குழந்தைகள், தந்தையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்
                  • தொழிலில் ஜாக்கிரதை தேவை. புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். வேலைக்கு செல்லும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
                  • எதிரிகள், தாய்மாமன், தந்தை ஆகியவர்களின் விசயங்களிலும், அவர்களை சார்ந்த விசயங்களிலும் எச்சரிக்கை தேவை குடும்பத்தில் சில சில சலசலப்பு தோன்றி மறையும். 
                  • வீடு, வீடு சார்ந்த விஷயம் சாதகமாக இருக்கும். வீடு சம்மந்த பட்ட விசயங்கள் சாதாகமாகும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
                  • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                  தசா பலன்கள் -  புதன் 
                    ரிஷப லக்னத்திற்கு அதிபதி  சுக்கிரன். சுக்கிரன் நட்பு கிரகம் புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                    • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
                    • திருமண வயது உடையவருக்கு திருமணமும், குழந்தையை எதிர்பார்ப்பவருக்கு குழந்தை பேரும் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலை உண்டாகும். 
                    • பொருளாதாரம் மேம்படும். வாக்கு தொழில் சிறப்பாக இருக்கும். ஜோதிடம், வான்வெளி தொழில் இருப்பர்வர்கள் சிறப்பு பெறுவார்கள். பொதுவாக தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சிறக்கும். 
                    • இன்பம், ராஜ மாரியாதை, மனதில் சந்தோஷம், பந்து சேர்க்கை ஆகியவை கிடைக்கும் 
                    • புதன் கெட்டால் இருக்குமிடம் பெயர்தல், சண்டை சச்சரவு உண்டாகுதல், தலைவலி, அன்னியர் விரோதம், ரத்த சோகை, பெண்களால் சண்டை உண்டாகும். பொதுவாக புதன் திசை ரிஷப லக்கினத்திற்கு நல்லதே செய்வார் 
                    • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                     தசா பலன்கள் -  குரு  

                    மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                    • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                    • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                    • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                    • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                    • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                    • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                    • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                    • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                    • ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்க்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

                    • குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
                    • குழந்தைகளால் செலவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப செலவாகவும் இருக்கலாம்
                    • இளைய சகோதர சகோதரி வகையில் பிரச்சனை வரலாம். 
                    • Documentation பிரச்சனை மற்றும்  கேரண்டி கையழுத்து போட்டால் பிரச்சனை உண்டாகும். யாருக்கும் கேரண்டி கொடுக்க வேண்டாம். 
                    • வெளி நாட்டு பயணம், தொழில் அலைச்சல் ஆகியவை அதிகமாக இருக்கும். அலைச்சல் இல்லை என்றால் விரயம் இருக்கம் வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                    • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                    தசா பலன்கள் - சுக்கிரன்  

                      ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். மேலுமே அவர் 6க்கு உரியவர்  சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                      • சுக்கிரன் தனது தசையில் நல்லது கெட்டது கலந்து தான் தருவார் 
                      • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
                      • தொழிலில் பிரச்சனை வரலாம். 
                      • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
                      • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
                      • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
                      • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
                      • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
                      • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
                      • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                      தசா பலன்கள் - சனி 

                        ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்,  சனி நட்பு.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                        • ரிஷபம் லக்கினம் ஸ்திர லக்கினம். 9ம் வீடு பாதாகதிபதி. சனி 9, 10க்கும் உரியவர். சுக்கிரன் சனி நட்பு கிரகம். ஆனாலும் சனி பாதாகதிபதியும் ஆவார். ஆனால் சனி நல்ல யோகாரகன் ஆவர்.
                        • ரிஷபம் லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். 
                        • சனிதசை வரும் போது அதிகம் ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து, நேர் வழியில் சம்பாதித்தால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். மாறாக அதிகம் ஆசைப்பட்டால் அதற்குரிய பாதிப்புகளை சந்தித்தே தீர வேண்டும். 
                        • நல்ல வருமானம் உண்டு. அதனால் கெட்ட பழக்கங்கள், கெட்டவர்களின் தொடர்ப்பு வர வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
                        • வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமம்ப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும் 
                        • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                        தசா பலன்கள் -  ராகு  

                          ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                          • ராகு, கேதுக்கு உச்சம் நீசம் இல்லை என்று ஒரு ஜோதிட நூலும், சில நூல்கள் ரிஷபத்தில் ராகு உச்சம் , விருச்சிகத்தில் நீச்சம் என்றும், மேலும் சில நூல்கள் ரிஷபத்தில் இரண்டும் உச்சம் , விருச்சிகத்தில் இரண்டும் நீசம் என்றும் கூறகிறது. எதுவாக இருந்தாலும் ராகு ரிஷபத்திற்கு நல்லவரே.
                          • தந்தை, தந்தை சார்ந்த விஷயம், தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயங்களில் நன்மையே உண்டாகும்.
                          • மன அழுத்தம் அதிக இருக்கும். தியானம் மிக அவசியம்.  
                          • குழந்தைகள் சார்ந்த விசயங்களில் மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த விஷங்களில் டென்ஷன் அதிகமாக இருக்கும்.
                          • தொழிலில், செல்லும் வேலையில் சிறப்பு இருக்கும். தொழில் சார்ந்த விசங்களில் நல்ல லாபமே 
                          • பலமிக்க கிரகத்துடன் இணைந்திருக்கும் ராகு அக்கிரகத்தின் ஆதிபத்தியத்தை ராகு திசையில் ராகுவே அப்பலன்களை செய்வார் என்பது ஒரு சோதிட விதி. 
                          • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                          தசா பலன்கள் -  கேது  

                            ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன், கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                            • பணம் விரையம் ஆகும். சுப யோகமாக மாற்றி கொள்ளுவது தனிப்பட்டவர்களின் திறமை.
                            • தந்தை, தாய், குழந்தைகள் , வாழ்க்கை துணை, இளய சகோதர சகோதிரி  மற்றும் வீடு ஆகிய அவற்றின் சார்ந்த விஷயங்களில் பிரச்சனை தரும். கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர்.
                            • வேலை பளு அதிகாமாக இருந்தாலும் நல்ல வருமானம் இருக்கும் . உடl நலனில் பிரச்சனை  உண்டாகி மறையும். 
                            • மற்றவர்கள் உங்களை பற்றி புறம் கூற வாய்ப்பு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும்.
                            • போட்டிகளில் வெற்றி, நிலபுலன்களை வாங்கும் அமைப்பு, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒருவேளை செவ்வாயும், கேதுவும் கெட்டு இருந்தால், இதற்கு எதிர்மறையானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
                            • கோவில்கள், புனித ஸ்தல்ங்கள், யாத்திரைகள் மற்றும் சித்தர் வழிபாடு செல்ல சூழநிலையை அமைத்து தருவார். 
                            • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                            ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் கிருத்திகை பாதம் – 2,3,4 , ரோகிணி, மிருகசிரிஷம் 1, 2 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம்.  அதாவது லக்கினம் ஏறிய நட்சத்திரம்.
                            அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                            ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                            ரிஷபம் லக்கினம்  – கிருத்திகை 

                            கிருத்திகை 2,3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                            கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். ரிஷப கிருத்திகையில் பிறந்தவர்கள் குணநலன்கள் பார்த்தால் சாஸ்திரம் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியைத் தேடிச் செல்பவர்கள்,   தேவையற்ற சினம் கொண்டவர்கள், வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள், நண்பர்கள் கூட்டம் உண்டு, ஒழுக்கம் கடைப்பிடிக்கத் தவறியவன், நேசமும் நட்பும் உள்ளவர்கள், சுதந்திரத்தை விருபதக்கவர், ஒருசிலர் தீமை செய்பவராகவும் மற்றும் மற்றவர்களை மதிக்காதவராகவும் இருப்பார்கள். படிப்பு குறைவாக இருக்கும், பொறுமையற்றவர், எதாவது ஒருவகை துக்கம் இருக்கும், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வந்துவிடும், நேர்மையான எதிரிகள் உண்டு, கர்வம் கொஞ்சம் இருக்கும். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர். ற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும்

                            ரிஷபம்  லக்கினம்  – ரோகிணி 

                            ரோகிணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், சந்திரன்  தாக்கத்துடன் இருப்பார். சந்திரனுக்கு மிக பிடித்த நட்சத்திரம் என்று புராண கதைகள் சொல்கின்றன.

                            இந்த நட்சத்திரம் விண்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சௌபாக்கியமும், சௌந்தர்யமும்,  முரட்டுத்தன்மை இருக்கும், சிலருக்கு சிறு வியாதி இருந்துகொண்டு இருக்கும், கவிதை கற்பனையில் இருந்துகொண்டு இருப்பார். சினிமா துறை என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று, தன்மானமிக்கவன், கருணை அமைதி மிக்கவன், ஒழுக்கமானவன், வாய்மை மிக்கவன், சாந்த சொரூபி, ஜீவநேயம் கொண்டவன், குருவின் ஆசிர்வாதமிக்கவன், இசையில் ஆர்வ மிக்கவன், சூட்சம மந்திரம் ஜெபிப்பவன், இலக்கிய ஆர்வம் குறைவு, தெளிவான ஆராய்ச்சி ஈடுபடுவான், எல்லாரிடமும் இதமாக பேசி நோக்கை அடைவான்.பிறருக்கு சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்கள். பெரிய பதவி நோக்கிச் செல்பவர்கள், பெண்களுக்குப் பிரியமானவராகவும், அறிவுரைகளைக் கேட்பார்கள், வருங்காலத்தை பற்றி யோசிப்பார், மெல்லிய குரலில் பேசுவார்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள், செல்வம் அதிகப்படுத்துவதில் ஆர்வம், பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்டவர், பாராட்டு பெறுவார்கள், சுகபோக வாழ்க்கையை வாழபிடிக்கும், சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். 


                            ரிஷபம்  லக்கினம்  –மிருகசிரிஷம் 1,2 பாதங்கள்   

                            மிருக சிரிஷம் 1,2  நட்சத்திர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், செவ்வாய்தாக்கத்துடன் இருப்பார்.
                            மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். முதல் இரண்டு  பாதங்கள் ரிஷபத்திலும் மற்றவை மிதுனத்தில் இருக்கும். இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இந்த லக்கினத்தில் துணிச்சல் அதிகம் இருக்கும்,  திடமான நம்பிக்கை அதைவிட அதிகம் இருக்கும், சுறுசுறுப்பானவர், செல்வமுடையவன், சுறுசுறுப்பானவர்கள், மரியாதையுடன் நடப்பவர்கள், தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும், மகிழ்ச்சியானவர். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர்.

                            மந்திரம் 

                            ரிஷப  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய முருகன் துதியை மனதார சொல்லி வருவது நல்லது 
                                                                              பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
                            பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
                            பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
                            பெருமான் என்னும் பேராளா!
                            சேரா நிருதர் குல கலகா!
                            சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
                            தேவா ! தேவர் சிறைமீட்ட
                            செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
                            பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
                            பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
                            வா, வா, என்று உன்னைப் போற்றப்
                            பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
                            வாராது இருக்க வழக்கு உண்டோ !
                            வடிவேல் முருகா ! வருகவே !
                            வளரும் களபக் குரும்பை முலை
                            வள்ளி கணவா ! வருகவே !

                             ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்