2க்கு உரியவனாகிய சூரியன் கொல்லான்.
சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்வது நல்லது அல்ல.
கடகம் லக்கினம்- சுப சேர்க்கை
- சூரியன்+சுக்கிரன்
- சூரியனை சுக்கிரன் பார்த்தல்
- சுக்கிரனை சூரியன் பார்த்தல்
- சுக்கிரன் சூரியன் நட்சத்திரம் ஏறுதல்
- சூரியன், சுக்கிரன் நட்சத்திரம் ஏறுதல்
- கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்
- மிதுன லக்கின சுபராக சுக்கிரனும் அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு அசுபராக வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
பொது பலன்கள்
- தனவான் , பிதாவுக்கு அடங்காதவன், குரு விசுவாசி, கபடம் உள்ள அவமானான களத்திரகாரகன், தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை உடையவன், அற்ப புத்திரன் உடையவன்.
- கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை அப்படியே நண்டுப் பிடியாகப் பிடித்துக்கொள்வார்கள். கூர்மையான பார்வை கொண்ட இவர்கள், விடாமுயற்சி, பிடிவாதம் கொண்டிருப்பார்கள். தெளிந்த அறிவும் சிந்திக்கும் திறனும் மிக்கவர்கள்.
- நண்டு சின்னம்: நண்டின் தன்மை அது தன் எல்லா குட்டிகளை அரவணைத்துப் போல இந்த கடக லக்கின ஜாதகர்கள் அதிக பாசக்காரர்கள் மற்றும் அன்பால் அரவணைப்பவர்கள்.
- "மாற்றானுக்கு இடம் கொடேல்’ (Never let your enemy to hurt and succeed you) என்றொரு பழமொழிக்கு ஏற்ப இந்த லக்கின காரர்களை மெல்லத் தன்னை நுழைத்துக்கொண்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கும் கெட்டிக்காரர்கள்.
- “நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் வளர வளர இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். தன் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலைகளை கற்று மாறிக்கொண்டு இருப்பார்கள்.
- கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையானவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள்.
- வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
- கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும்.
- பெரிய பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். தானம் தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
- செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள்
- நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் . இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி போகவே இருப்பார்கள். சிலசமயங்களில், இவர்கள் தைரியம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பர். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள். ஆனால் இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
- இவர்கள் தண்ணீரில் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். தண்ணிரால் உடல் நலம் சிலருக்கு பாதிக்கும்
- செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பர். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலைகளிலும், இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். எதையும் ஆர்வமுடன் கற்பார்கள்.
புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23
கடக லக்கினம்
கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே
பொருள்:
இப்பாடலில் கடக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்
“கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் தீய பலனையே தருவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். “
விளக்கம்:
கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீய பலன்களைத் தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரஜித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவப்பரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது
குறிப்பு:
கடக லக்கினத்திற்கு 4, 11 உடையவர் சுக்கிரன் என்றாலும் சுக்கிர தசா புத்தி களத்தில் நல்லது செய்ய மாட்டார். 5, 10 க்கு உரியவர் செவ்வாய் என்றாலும் செவ்வாய் இங்கு நீசம் அடைகிறார்.
சுக்கிரன் இவர்களுக்கு மிகுதியான தீய பலன்களைத் தருவார். ஆயினும் சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானம் ஆகிய 1, 5 யில் நின்றால் மிகவும் நல்லது. மற்ற எந்த இடத்தில் சுக்கிரன் இருந்தாலும் நல்லதல்ல.
திருமண வாழ்க்கை
- 7, 8க்குடையவர் சனி. திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது.
- வழக்காடுவதில் வல்லவர்களாக இவர்களின் வாழ்க்கைத் துணை அமைவார்கள். மேலும் கொண்ட கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள்.
- இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும்.
- திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவராக இருப்பார்கள்.
- மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி – லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார்.
- திருமணம் ஆனவுடன் சிலருக்கு மாமனாரே நல்ல வேலை வாங்கிக் கொடுத்தோ அல்லது வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தோ பெருமைப்படுத்துவர்.
- ராசிக்கு 7 – ஆம் அதிபதியான சனி உச்சமானால் , நல்ல சுகபோகத்துடன்- நிறைந்த கௌரவத்துடன் எல்லாரும் வந்து பணிவுடன் பேசும் அளவுக்கு பெரிய மனிதத்தன்மையோடு இருப்பர். ஆனால் நீசமானால் திருமணம் ஆனவுடன் வேலை போய் , கெளரவம் இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள்.
தொழில்
- தனக்காரகன் செவ்வாய் என்றாலும் கடகத்தில் செவ்வாய் நீசம் ஆகிறார். ஆனாலும் செவ்வாய் யோககாராரே.
- கடன் கொடுத்தவர்களிடமிருந்து பேசி மீண்டும் பணத்தை திரும்பப் பெறும் திறன் உங்களுக்கு இருக்காது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்
- எந்த வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாகவும் அழகுணர்வோடும் செய்து முடிப்ப்பார்கள். மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
- கடல் சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். சரித்திரம் சார்ந்த பதிவுகளை துல்லியமாக எழுதும் திறமை உடையவர்களாக இருப்பீர்கள். எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், நடிக நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் உங்களால் ஜொலிக்க முடியும்.
- ஐந்து, பத்துக்குடையவராக, ஒரு கோணத்திற்கும், கேந்திரத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் செவ்வாய் இருக்கிறார். மற்றும் சூரியன், சந்திரன், குரு மூவரும் ஆகிய கிரகங்களின் பலம், பார்வை ஏற்பட்டால் தொழிலில் பல சாதனைகள் செய்யும் யோகம் உண்டாகும்.
- மருத்துவம்,ஆன்மீகம், சினிமா போன்ற துறைகளில் சாதித்தவர்கள் பெரும்பாலும் கடக லக்னத்தில் பிறந்தவர்களே
- லக்னாதிபதி பலம் பெற்றால் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் மந்தமான முன்னேற்றம். பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள்
- 2மிடத்து அதிபதியாக சூரியன் வருவதால் அரசு மற்றும் அரசியல் லக்னம் என்றே குறிப்பிடலாம். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசினோடு எந்தவிதத்திலாவது தொடர்பினை வைத்துக் கொள்ள நேரிடும்.
- 10மிடமாக செவ்வாய் வீடு வருவதும் ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்கு செவ்வாய் பலமான உதவிகளை செய்து விடுகிறார். பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.
- மேலும் அழகு மற்றும் பேஷன், வங்கி மற்றும் நிதி, உயிரியல் மற்றும் தாவரவியல் துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
- சூரியன், புதன் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் அரசு பள்ளியில் கணித ஆசிரியர், அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரி போன்ற பணிகளின் மூலம் வருமானம் உண்டாகும்.
- சூரியன் செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் பத்திரப்பதிவுத்துறை, அரசு சட்டக் கல்லூரி, பேராசிரியர், காவல்துறை, ராணுவம் அரசு கிடங்கு மற்றும் குழந்தைகள் தொடர்பான தொழில்கள், அரசு மருத்துவமனை பணி போன்ற வேலைகளில் மூலம் வருமானம் ஏற்படும்.
கிரகங்கள்
சூட்சுமங்கள்
- இவர்களுக்கு குரு , செவ்வாய் யோகமானவர்கள் ஆனால் செவ்வாய் கடகத்தில் நீசம் ஆகும்.
- சனி 7 மற்றும் 8 உடையவர் என்றாலும் அவரே மராகாதிபதி ஆவார்.
- சுக்கிரன் வீட்டில் தான் சந்திரன் உச்சம் அடைகிறார். ஆனாலும் சுக்கிரன் பகையே.
- சந்திரன் நீசம் அடையும் வீடு விருச்சிகம். ஆனால் செவ்வாய் யோககாரகன். எனவே சந்திரனின் நீசத்தை அதிகமாக கணக்கு எடுத்து கொள்ளவது இல்லை.
- சந்திரன் வளர்பிறை என்றால் நல்ல பலனையும் தேய்பிறையானால் தீய பலனையும் தர வல்லவர்.
- கடக லக்கினகாரர்களுக்கு எங்கு சந்திரன் நின்றாலும் நல்லது என்று சில ஜோதிட நூல்கள் கூற்கின்றன .
தசா பலன்கள் - சூரியன்
- சூரியன் 2க்கு உடையவர். அரசியல் தொடர்பு சிறப்பாக இருக்கும்
- குடும்ப நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
- பொருளாதாரம் மேன்மை அடையும். புதிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
- கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
- செல்வாக்கு அதிகரிக்கும்.தனச்சேர்க்கை உண்டாகும்.
- உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்
- கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
- சூரியன் தந்தைக்காரகன் என்பதால் தந்தையின் பாசம் அபரிமிதமாக இருக்கும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். மன தைரியம் அதிகரிக்கும்
- சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
தசா பலன்கள் - சந்திரன்
- வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
- செய்யும் செயல்களால் கீர்த்தி அதிகரிக்கும். வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- குடும்ப நபர்களிடம் ஆதாயமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
- ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
- சந்திரன் பலம் குறைந்து தன் தசாவையோ, புத்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் கொடுக்கும்
- சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
தசா பலன்கள் - செவ்வாய்
- கடகத்தில் செவ்வாய் நீசம் அடைந்தாலும் அவர் 5 மற்றும் 10 க்கு உரியவர். ஆதலால் அவர் நன்மையே செய்வார்.
- திருமணத்திற்கு காத்திருபவர்களுக்கு திருமணமும், திருமணமானவர்களுக்கு குழந்தை பேரும் உண்டாகும். மேலும் குழந்தைகளால் மகிழ்ச்சி, பெருமை உண்டாகும்.
- அதிஷ்டம் நல்ல வழியில் கிடைக்கும்.
- படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலைக்கு செல்வபவர்க்கு பதிவி உயர்வு, எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும்.
- தொழில் செய்பவருக்கும் மிக நல்ல பலனே நடக்கும்
- கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். கோபத்தினால் சில பிரச்சனைகளை வந்து போகும்.
- செவ்வய்யுடன் சுபகிரகம் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் மிக நன்றாகவே இருக்கும்
- செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
- புதன் கடக லக்கினத்திற்கு 12, 3ஆம் அதிபதி மேலும் பகை கிரகம். நல்லது செய்யாது. இது யோகமில்லாத கிரகம் ஆகும் .
- கடக புதன் எந்த ஒருவரை எதிலும் உயர் நிலையை எட்ட விடுவதில்லை. அதனால் கடக லக்கினகாரர்களுக்கு புதன் திசை மோசமான திசை என்ற சொல்லாம்.புதன் நல்ல இடத்தில் இருக்கும் பட்சத்தில் பிரச்சனை குறையும்.
- புதன் திசையில் பிரச்சனை தருவதுடன் சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பு அதிகம் கவனம் கட்டாயம் தேவை.
- புதிய முயற்ச்சிகள் எடுக்க தோன்றும். ஆடம்பரத்தை மனம் விரும்பும்
- கலையில் ஆர்வம் பிறக்கும். அந்த துறையில் இருப்பவருக்கு சிலருக்கு நமை உண்டாகும்.
- நல்லது, கெட்டது, நல்லவர், கெட்டவர் புரிந்து கொள்விர்கள். அனுபவத்தால் தான் சில விசயங்கள் புரியம்
- புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
தசா பலன்கள் - குரு
- இவர் 6 மற்றும் 9 க்கு உரியவர். குரு நட்பு கிரகம். குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார். கடக லக்கினகாரர்களுக்கு குருவும் செவ்வாயும் யோகாரார்கள் ஆவார் .
- கடக லக்னத்துக்குப் பாக்கியாதிபதியாக அமைந்து யோகம் தருவார்
- உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
- வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
- வயதுக்கு ஏற்ற நல்லது நடக்கும். தந்தை, தந்தைவழியில் நன்மை கிடைக்கும்.
- வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்
- கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு அது சுப செலவாகவும் இருக்கலாம்.
- 6க்கு உடையவர் என்ற வகையில் சில பிரச்சனைகள், கடன்கள் உண்டாகும் ஆனாலும் செல்வம் அதிகரிக்கும்
- குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
தசா பலன்கள் - சுக்கிரன்
- கடக லக்னத்துக்கு சுக்கிரன் நான்காம் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபராக வருகின்றார். அதாவது சுகாதிபதி மற்றும் லாபாதிபதி ஆக வருவார். ஆனாலும் கடக லக்கினாதிபதி சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகையானவர்கள்
- கடக லக்கினக்காரர்களுக்கு ஏழாம் இடமாகிய மகர ராசியில் சுக்கிரன் இருந்து தசை நடத்தினால் களத்திர தோஷத்தை ஏற்படுத்துவார்
- கடக லக்னத்திற்கு சுக்கிரன் நான்காமிடத்தில் ஆட்சியும் மூலத் திரிகோணமும் பெற்று யோகம் செய்வார். இங்கிருக்கும் சுக்கிரன் திக்பலமும் பெறுவார் என்பதால் இது ஒரு கூடுதலான நன்மைகளை தரும் என்றாலும் சுக்கிரன் இந்த இடத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்படுவார் என்பதால் என்னதான் யோகம் செய்தாலும் சில நெருடல்களும் இருக்கும். மேலும் கடக, சிம்ம லக்னங்களுக்கு நல்ல நிலைகளில் இருந்தாலும் சுக்கிரன் மனப்பூர்வமாக நன்மைகளைச் செய்வது இல்லை.
- சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
தசா பலன்கள் - சனி
- கடக ராசி லக்னத்திற்கு சனி ரொம்ப நல்லவர் கிடையாது. மேலும் இவரே மராகாதிபதியும் ஆவார்.
- சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் சனி தசை நடக்கும்போது தலைமை பதவியை சனி தருவார்.
- அஷ்டமாதிபதி இருக்கும் சனியால் சற்று கடும் பலன்கள் இருக்கும் என்று சொல்ல முடியும்
- திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
- எட்டுக்கு உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது.
- சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
- வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்
- சனி திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
தசா பலன்கள் - ராகு
- சந்திரனுக்கு ராகு பகை. இவர்களுக்கு ராகு திசை நல்ல திசை இல்லை .
- முதல் சில வருடங்கள் மிகுந்த போராட்டமாகவும், அலைச்சல் மிகுந்தாகவும் இருக்கும்.
- உடல் நலனில் அக்கறை கட்டாயம் வேண்டும்
- ஆனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள இருக்கும். அதனால் செலவும் உண்டு. குடும்பம் பொருத்தவரை முன்னேற்றமாக தான் இருக்கும். வீடு , வீடு சார்ந்த விசயங்களும் நன்றாகவே இருக்கும்
- குழந்தைகளால் தொல்லை இருக்கும். எந்த வயது குழந்தையைக் இருந்தாலும் அவர்களால் நிம்மதி குறையும்
- தொழிலில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.
- இந்த திசை நடக்கும் போது எந்த கெட்ட பழக்கத்தையும் பழக வேண்டாம். பல பிரச்சனைகளை பார்க்க நேரிடும். இழப்பும் உண்டாகும்.
- ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
தசா பலன்கள் - கேது
- சந்திரனுக்கு கேது பகை. இவர்களுக்கு கேது திசை நல்ல திசை இல்லை .
- கேது திசை வரும் போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை. சுப வீடுகளில் கேது இருக்கும் போது வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் நன்மை மட்டும் செய்வார்.
- சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
- வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார்.
- சுப வீடுகளில் கேது அமர்ந்து இருந்தால் ஞானிகள் தரிசனம் ஆன்மீக பயணங்களை ஏற்படுத்துவார்.
- ஆனாலும் இந்த திசை காலத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனகுழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
- கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
கடகம் லக்கினம் – நட்சத்திரம்
கடகம் லக்கினம் – புனர்பூசம் - 4
கடகம் லக்கினம் – பூசம்
கடகம் லக்கினம் – ஆயில்யம்
மந்திரம்
அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !