What can we predict by astrology?

ஜோதிடம் மூலம் நாம் என்ன கணிக்க முடியும்?



ஜோதிடத்தில்  அனைத்தையும் ஒரு ஜோதிடரால் கணிக்க முடியும்.  ஆனாலும் 

"ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற  முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும் என்று கூற முடியாது" 

                               --  என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார்.

ஜோதிடத்தை பற்றி  இயற்பியலாளர் சுபாஷ் கக் கூறுகிறார் – 

“வேத தெய்வங்கள் பல நட்சத்திரக்கூட்டங்களின் தலைமை சக்தியாக கருதப்படுகின்றன. ..சோதிடம் எப்படி செயல்படுகிறது? கோள்களோ விண்மீன்களோ பௌதீக ரீதியாக மானுட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ பாதிக்கின்றன என கருதமுடியாது ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சில ஆழ்ந்த ஒழுங்குமுறைகளின் வெளிப்படு தன்மையே சோதிடம் மூலமாக வெளிப்படுகிறது என கருதலாம். அதாவது சோதிடம் என்பது இயற்கையின் நிர்ணய சக்தியினை நாம் நம்க்கு புரியும்படியான சில குறியீடுகள் மூலம் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம் என்பதே ஆகும்.”.

கடந்த, நிகழ், எதிர்காலம் என மூன்றையும் அறிந்தது பரம்பொருள் மட்டுமே. அனைத்தையும் மாற்றுவதற்கு அதிகாரமுள்ள அந்த மகாசக்தியால் ஒரு ஜோதிடரின் கணிப்பையும்  மாற்ற முடியும்.

ஒரு ஜோதிடரால், ஒரு ஜாதகத்தில் நூறு சதவிகித துல்லிய பலனைச் சொல்ல முடிந்தாலும் அவரை நாடி வரும் அனைவருக்கும் சரியான பலனைச் சொல்ல முடியுமா? என்றால் முடியாது எனபதுதான் பதில். ஒரு ஜாதகத்தைச் சரியாகக் கணிக்கலாம். அனைத்து ஜாதகத்தையும் நூறு சதவிகித வெற்றியுடன் கணிக்க முடியாது.

ஒரு ஜோதிடாரால் கணிக்க முடிந்தவை 

  1. ராசி கட்டம் (அ) சக்கரம், நவாம்ச கட்டம், பாவம் கட்டம், திரேக்காணம் கட்டம்,ஹோரா (ஓரை) கட்டம், சதுர்தாம்சம், சப்தாம்சம், சஷ்டியாம்சம், துவாதசாம்சம் , தசாம்சம், சோடாம்சம் , சஷ்டியாம்சம் , பஞ்சாம்ச கட்டம், அஷ்ட்டாம்ச கட்டம் அமைக்க முடியும். (அதாவது கணிக்க முடியும் )
  2. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் கணிக்க அல்லது கண்டு பிடிக்க முடியும்.
  3.  குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? என்றும் கணிக்க முடியும். (அது ஆணா அல்லது பெண்ணா என்று கணிக்க நல்ல திறமை வேண்டும். திறமை இருந்தால் கட்டாயம் கணிக்க முடியும்)
  4.  கிரகங்கள்  வீற்றிருக்கும் பாகை அறிதல் முக்கியமான ஒன்றாகும். 
  5. கிரகங்கள்  வீற்றிருக்கும் கிரகத்தின் நிலை அறிதல். அதாவது ஒரு ராசியில் ஒரு ஒரு கிரகம் இருக்கிறது என்றால் அது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பது தான். அந்த நட்சத்திரத்தின் அதிபதிதான் கிரகம் நிற்கும் கிரகம் (நட்சத்திரத்தின் அதிபதி)
  6. பொதுவான குணங்கள், குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்கள் மற்றும் தொழில் ஆகியவற்றை அறியலாம். 
  7.  நடக்கும் அல்லது நடக்க போகும் தசபுத்திகளை கண்டு அறிந்த அதனால் வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டது கணிக்க முடியும் 
  8. கோசரா பலன்களின் நிலையை கண்டு அறிதலும் ஒன்று ஆகும் 
  9. யோகமான நட்சத்திரம் மற்றும் அவயோகமான நட்சத்திரம் கண்டு அறிதல். 
  10. அஸ்தங்கம், வக்கிரம், வர்கோத்தமம், உச்சம், நீச்சம் போன்ற கிரக நிலைகளை அறிதல்.
  11. கட்ட அமைப்பு மூலம், ஜாதகரின் சாபம்,   கண்டம் மற்றும் மரணம்  தரும் கிரகங்களை அறிதல். ஆனால் மரணம் கணிப்பது மிக கடினமான ஒன்று.
  12. கட்ட அமைப்பு மூலம், ஜாதகர் பெறும் சிரமங்கள், இன்பங்கள், அலைச்சல்கள் தரும் கிரகங்களை அறிதல். 
  13. மேலும் இது தவிர, ஜாதகரின் கேள்விகளுக்கு ஏற்ப தகுந்த ஜோதிட விதிகளை ஆராய்ந்து பதில் அளிக்க முடியும். பரிகாரமும் சொல்ல முடியும் 
   மேலும் ஜோதிடருக்கு ஜோதிடரின் கருத்துக்கள் மாறுபடுகிறது. ஜோதிடம் ஒரு கடல். முத்து எடுப்பவரும் உண்டு, மீன் பிடிப்பவரும் உண்டு. பொதுவாக  ஜாதகம் கணிப்பவர் காசுக்காக செய்யக் கூடாது. தட்சணை கொடுத்தா வாங்கிக்கலாம். கெடுதல்களைசொல்லும் போது நாசூக்கு வேண்டும். ஜாதகர் தகுதிக்கும், நிலைக்கும் பொருத்தமற்ற பரிகாரங்கள் சொல்லக் கூடாது. இப்படிப் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதை மீறுபவர்கள் சொல்வது பலிக்காது.