History of Tamil Astrology

முன்னுரை:

ஜோதிடம் கலை (Tamil Astrology) 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது. ஜோதிடம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பதிலிருந்து பிறந்தது.  கோள்களின்(Planets) நகர்வை வைத்துக் கொண்டு வருங்காலத்தை கணிக்க முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிடம். மிக சரியாக கணிக்க முடியுமா? ஜோதிடம் என்பது கடல். நம்மால் சில முத்துக்களை தான் எடுக்க முடிகிறது. 

“ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு அவர்களால் இயன்ற  முன்கூட்டி அறிவிக்கிறார்கள். ஆயினும் நம்மை படைத்த பிரம்மனை தவிர வேறு யாராலும் திட்டவட்டமாக ‘இது தான் நடக்கும் என்று கூற முடியாது"

என்று சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர் காளிதாசன் அவர்கள் தனது வாக்கில் கூறியுள்ளார்.

வேதத்தில் ஆறு பாகங்களில் ஜோதிடமும் ஒன்று. எனவே வேதம் உள்ளவும் நின்று பயன் தரும். மகரிஷிகள் நமது நன்மைக்காகவே இவற்றை நமக்கு தொகுத்து தந்து உள்ளனர். 

ஜோதிடத்தில் மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக கூறலாம். அவை 

        • பராசர மகரிஷி முறை 
        • ஜைமினி மகரிஷி முறை
        • தாஜக் முறை 

பொதுவாக பராசரமகரிஷி முறை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. இவர்கள் எல்லாம் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். 

சொல்லிலக்கணம்

சோதிடம் என்ற வார்த்தையான ரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்தது என்று சொல்லப்படுகிறது. இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.

Father of Tamil Almanacs


அமரர் C.G.ராஜன் அவர்கள் சித்தாந்த ராஜ சிரோமணி, டேபிள்ஸ் ஆப் பாவாஸ், ஜாதக கணிதம், பிருஹத் ஜாதகம்,பராசர ஓரை முதலிய 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஆனந்தபோதினி சுத்த திருக்கணித பஞ்சாங்கம் (தற்போது வாசன் பஞ்சாங்கம்), தென்னாட்டு வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய பஞ்சாங்கங்களின் கணித ஆசிரியர் மற்றும் தமிழ் பஞ்சாங்கங்களின் பிதாமகர் ஆவார். அவர் தான் ஜோதிட உலகின் ஜாம்பவான் என்று கூட சொல்லாம்