தமிழ் ஜோதிட புத்தகங்கள்:
ஜோதிட முத்துக்கள்: ஜோதிட அடிப்படை பாடம்
ஜோதிட முத்துகள் என்ற பெயரில் வெளியாகும் புத்தகங்கள் தமிழில் ஜோதிடத்தை அறிய உதவும். இந்த புத்தகத்தின் முலம் அடிப்படை ஜோதிடத்தை கற்கலாம். இந்த பகுதி பராசரமகரிஷி முறை பின்பற்றி எழுதப்பட்டது ஆகும். இந்த புத்தகங்கள் எல்லாம் அமேசான் (amazon Kindle) லில் படிக்கலாம் .
புத்தகம் : 3
தலைப்பு : ஜோதிட முத்துகள்: நட்சத்திரங்கள் -27
புத்தகம் : 4
தலைப்பு : ஜோதிட முத்துக்கள்: புலிப்பாணி ஜோதிடம் பகுதி - 1
புத்தகம் -3 இருப்பவை
- ஜோதிட முத்துகள் - நட்சத்திரங்கள் -27 இந்த புத்தகத்தின் மூலம் ஒருவர் பிறந்த நடசத்திரத்தின் பலன்களை அறிய முடியும். இந்து தமிழ் ஜோதிடத்தில் லக்கினமே பிரதானம் என்றாலும் நட்சத்திர வைத்தும் பலன் சொல்ல முடியும்.
- இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் நட்சத்திரத்தின் நிலை ஆராய முடியும். இந்த புத்தகத்தில் 27 நட்சத்திரங்க்களை பற்றி மிக விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.
- நட்சத்திர காரத்துவம் என்ற தலைப்பில் நட்சத்திரத்தின்
- ஆளும் உறுப்புகள்
- பார்வை
- பாகை
- தமிழ் மாதம்
- நிறம்
- இருப்பிடம்
- கணம்
- குணம்
- மிருகம்
- பறவை
- மரம்
- மலர்
- தமிழ் அர்த்தம்
- தமிழ் பெயர்
- சராதி நட்சத்திரப்பிரிவுகள்
- நாடி
- ஆகுதி
- பஞ்சபூதம்
- நைவேத்யம்
- தேவதை
- அதி தேவதை
- அதிபதிதன்மைகள்
- உருவம் மற்ற வடிவங்கள்
- மற்ற பெயர்கள்
- வழிபடவேண்டிய தலம்
- அதிஷ்ட எண்கள்
- வணங்க வேண்டிய சித்தர்
- பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்
- அதிஷ்ட நிறங்கள்
- அதிஷ்ட திசை
- அதிஷ்ட கிழமைகள்
- அணியவேண்டிய நவரத்தினம்
- அதிஷ்ட உலோகம்
- வெற்றி தரும் நட்சத்திரங்கள்
- நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
- குலம்
- புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
ஆகியவை விளக்கப்பட்டு உள்ளது.
- மேலும் 27 நட்சத்திரங்களின்
- பொதுவான குணங்கள்
- குடும்ப வாழ்க்கை
- நண்பர்கள்
- நட்பு நட்சத்திரங்கள்
- தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்
- தொழில்
- ஆரோக்கியம்
- தசா பலன்கள்
- நட்சத்திரத்தின் 4 பாதங்களில் பிறந்தவர்களின் குணநலன்கள் (நவாம்ச அதிபதியை வைத்து எழுதப்பட்டு உள்ளது)
- பொது பரிகாரம்
- நட்சத்திரம் வானில் தோன்றும் நாள்
- அந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
- பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்
- சொல்ல வேண்டிய மந்திரம்
இவை அனைத்தும் பராசர மகரிஷி ஜோதிட நுலின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது
புத்தகம் -4 இருப்பவை
- புலிப்பாணி ஜோதிடம் மிக பழமை வாய்ந்தது. இது ஆரம்ப நிலை ஜோதிடம் பயில்வோருக்கு மிக உபயோகமாக இருக்கும். புலிப்பாணி ஜோதிடம் 300 + 2 பாடல் வடிவில் உள்ளது. ஜோதிடத்தை பற்றி மிக விளக்கமாக தனது பாடல் வரிகளில் கூறியுள்ளார்.
- முதல் பாகம் - வழிபாடுகள் : கடவுள் வாழ்த்துக்கள் ஆரம்பித்து சக்தியை வழிப்பட்டு ஜோதிடத்தை கற்பிக்க ஆரம்பிக்கிறார் .
- இரண்டாம் பாகம் - கிரகங்கள் : பாடல் -3 முதல் 10 வரை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு - கேது வின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் பற்றிய புலிப்பாணி அவர்கள் சொன்ன விளக்கங்கள் ஆராயப்பட்டு உள்ளது.
- மூன்றாம் பாகம் - லக்கின ஸ்தான பலன்கள்: பாடல் -1 1 முதல் 21 வரை லக்கினம் முதல் 12 பாவங்களின் காரகத்துவத்தையும்
- நான்காம் பாகம் - லக்கின பொது பலன்கள்: பாடல் -22 முதல் 33 வரை மேஷம் லக்கினம் முதல் மீனம் லக்கினத்தை பற்றியும்
- ஐந்தாம் பாகம் - மாந்தி பலன்கள்: பாடல் -34 முதல் 39 வரை மாந்தி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
- ஆறாம் பாகம் - கிரகங்களின் ஸ்தானம் பலன்கள் :: பாடல் -40 முதல் 50 வரை 9 கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
- ஏழாம் பாகம் - ஜோதிட சூத்திரம் : : பாடல் -51 முதல் 147 வரை நல்ல ஜோதிட குறிப்புகளையும் மற்றும் நல்ல கெட்ட யோகங்களை என்பதை பற்றியும் சிறப்பாக புலிப்பாணி விளக்கி உள்ளார்.
- ஆரம்ப ஜோதிடம் பழகுபவருக்கு மிக சிறப்பாகவும், புரியும் படியும் பாடல் வடிவில் மிக சிறப்பாக விளக்கி உள்ளார்.
- மேலும் இந்த நுலின் மூலம் நமது ஜோதிடத்தின் பழமை நமக்கு புரிகிறது