Showing posts with label ஒளி பொருந்தியது. Show all posts
Showing posts with label ஒளி பொருந்தியது. Show all posts

சித்திரை

நட்சத்திரம் -சித்திரை


சித்திரை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 14 வது பிரிவு ஆகும்.

இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான (விண்மீன்கள்) நட்சத்திரம் அல்லது நட்சத்திர கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. அதன்படி சித்திரை நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் கன்னி விண்மீன் கூட்டத்தில் துலை இராசித் தொடக்கத்துக்கு அண்மையாகக் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தின் (இசுப்பிக்கா (Spica) பெயரைத் தழுவியது. சித்திரையின் சமஸ்கிருத பெயரான சித்ரா (Chitra) என்பது "அழகியது" அல்லது "ஒளி பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "ஒளி பொருந்திய மணி" அல்லது "முத்து" ஆகும்.

இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்ற தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.இந்த நட்சத்திரத்தில் 1, 2 ம் பாதங்கள் கன்னி ராசியிலும் 3, 4ம் பாதங்கள் துலா ராசியிலும் இடம் பெறும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்து, ‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனை காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்து கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவர் காணப்படுகிறது. இது அறியாமை என்பதே ஜோதிட வல்லுநர்களின் கூற்று.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2-ம் பாதங்கள் - தொந்தி, அடிவயிறு &&  3, 4-ம் பாதங்கள் - சிறுநீரகம், பிறப்புறுப்பு,  அடிவயிறு.

பார்வை

சமநோக்கு

பாகை

173.20 - 186.40

தமிழ் மாதம்

புரட்டாசி

நிறம்

வெண்மை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

ராட்ஷ கணம்

குணம்

மென்மை, மிருது/மைத்ரம், தாமசம்

மிருகம்

ஆண் புலி

பறவை

மரங்கொத்தி

மரம்

பாலில்லாத வில்வ மரம்

மலர்

செம்பருத்தி

தமிழ் அர்த்தம்

ஒளி வீசுவது

தமிழ் பெயர்

அறுவை

நாடி

மத்திம நாடி, பித்தம்

ஆகுதி

சித்ரான்னம்

பஞ்சபூதம்

நெருப்பு

நைவேத்யம்

கொழுக்கட்டை

தேவதை

சுக்கிரனின் குமாரனும் அசுரர்களின் புரோகிதனுமான த்வஷ்டா. மற்றொருவர் விஸ்வகர்மா.

அதி தேவதை

ஸ்ரீசக்கரத்தாழ்வார், விஸ்வகர்மா

அதிபதி

செவ்வாய்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம்

உருவம்

முத்து போன்ற வடிவமுடைய ஒரே நட்சத்திரம்

மற்ற வடிவங்கள்

முத்து,புலிக்கண்

மற்ற பெயர்கள்

நெய்ம்மீன், பயறு, அம்பரன், செல்வி, ஆடை, வஸ்திரம், ஓலியாரை, நீவி

வழிபடவேண்டிய தலம்

சித்திரரத வல்லப பெருமாள், மதுரை

அதிஷ்ட எண்கள்

சித்திரரத வல்லப பெருமாள், மதுரை

வணங்க வேண்டிய சித்தர்

கௌதமா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

பே, போ, ரா, ரீ

அதிஷ்ட நிறங்கள்

வெளிர் சிவப்பு, வெள்ளை

அதிஷ்ட திசை

தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வெள்ளி

அணியவேண்டிய நவரத்தினம்

வைரம்

அதிஷ்ட உலோகம்

பஞ்சலோகம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

ஸ்ரீசுதர்சனன், மதுரகவி ஆழ்வார், நாடாதூரம்மாள், ராமதாசர், கௌதம மகரிஷி, ராமலிங்க அடிகள், வாரியார் சுவாமிகள், மேரிகியூரி.

குலம்

வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்