முதலில் ஜோதிட கலையின் அடிப்படையான சிலவற்றை அறிந்து கொள்வோம்
ஜோதிட வாய்ப்பாடுகள்:
1 நாள் | 60 நாழிகை | 24 மணி துளிகள் |
1 நாழிகை | 60 விநாழிகை | 24 நிமிடங்கள் |
1 விநாழிகை | 60 தற்பரை | 24வினாடிகள் |
ஒரு ராசி மண்டலம் என்பது 12 ராசிகள் அதாவது 360 பாகைகள்
1 ராசி (30 பாகைகள் )யில் 2 1⁄4 நட்சத்திரங்கள் இடம் பெறும் .
1 நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். நட்சத்திரம் 1 பாததிற்கு 3 பாகை 20கலை விகிதம்
13 பாகை 20 காலை கொண்டது.
1 பாகை என்பது 60 கலை மற்றும் 1 கலை என்பது 60 விகலை ஆகும்
நட்சத்திரத்தின் மொழிதான் ஜோதிடம் அவை 9 கிரகங்கள் மூலமாக ஜோதிடத்தில் குறிப்பார்கள்
இப்போது எத்தனை நட்சத்திரங்கள் உள்ளது என்பதை பார்ப்போம். வானத்தில் ப லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது. அதை ஜோதிடத்தில் 27 பாகங்களாக பிரித்தது அதற்கு பெயர் வைத்து உள்ளது.
அந்த பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப் படுகிறது . ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன
இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன
முன்புறம், 1, 2, 3, 4 தொடர்ச்சி>>