யுகங்களை பற்றி பார்ப்போம். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு. ஒரு சதுர்யுகம் என்பது கீழ்வரும் 4 யுகங்களை கொண்டதுதான்
- கிருதயுகம்.
- திரேதாயுகம்
- துவாபரயுகம்
- கலியுகம்
ஒவ்வொரு தமிழ் ஆண்டுகளுக்கும் பெயர் உண்டு. மொத்தம் 60 ஆண்டுகள். 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இந்த நாள் முடிந்து அடுத்த நாள் பிறக்கிறது என்றால் இரவு 12.01 பிறகு 12.00 மறுநாள் இரவு முடிகிறது. ஆனால் நம்முடைய பண்டைய முறைப்படி சூரியன் உதயம் ஆகும் நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை ஒரு நாள் ஆகும்
உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் என்றும் நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.
சூரியயுதத்தை பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள்
இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கிறது.
1. திருகணித முறை
2. வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறை
முன்புறம், 1, 2, 3, 4, தொடர்ச்சி >>