ஜோதிடம் பாடம் -1 பக்கம் -3





பஞ்ச அங்கங்த்தின் ஐந்து அங்கங்கள்:
  1. திதி
  2. வாரம்
  3. நட்சத்திரம்
  4. யோகம்
  5. கரணம்


திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்




வளர்பிறை மற்றும் தேய்பிறைத் திதிகள்:

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.

தே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்க படுகிறது

இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி , நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது கரணம் என்பது 6 பாகைமணிகள் ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர




யோகம்

இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனின் தூரத்தையும், சந்திரனின் தூரத்தையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை நாம யோகம் என்பார்கள்.

அவையாவன:

  1. விஷ்கம்பம்
  2. ப்ரீதி
  3. ஆயுஷ்மான்
  4. சௌபாக்யம்
  5. சோபனம்
  6. அதிகண்டம்
  7. சுகர்மம்
  8. திருதி
  9. சூலம்
  10. கண்டம்
  11. விருதி
  12. துருவம்
  13. வியாகாதம்
  14. ஹர்ஷணம்
  15. வஜ்ரம்
  16. சித்தி
  17. வியதிபாதம்
  18. வரீயான்
  19. பரீகம்
  20. சிவம்
  21. சித்தம்
  22. சாத்தீயம்
  23. சுபம்
  24. சுப்ரம்
  25. பிராம்யம்
  26. ஐந்திரம்
  27. வைதிருதி

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது (stars) நட்சத்திராத்தையும், யோகத்தையும் வைத்தே யோகம (Yogam)் கண்க்கிடப்படுகிறது. இன்னன்னகிழமைகளில் இன்னென்ன நட்சத்திரம் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும். மீதியுள்ள நட்சத்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நட்சத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும். சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம். மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.

முன்புறம்,      1,       2,       3,       4       தொடர்ச்சி>>