நட்சத்திரம் - உத்திரட்டாதி

 உத்திரட்டாதி /   Uthrattathi / Uthra bhadrapada




உத்திரட்டாதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 26 வது பிரிவு ஆகும். உத்திரட்டாதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்திலும் ஆன்ட்ரோமெடா விண்மீன் கூட்டத்திலும் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரட்டாதியின்(ஆன்ட்ரோமெடாய்) பெயரைத் தழுவியது. உத்தரட்டாதியின் சமஸ்கிருதப் பெயரான உத்தர பத்ரபாத (Uttara Bhadrapada) என்பது "இரண்டாவது ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்", அல்லது "இரட்டையர்" ஆகும்.மேலும் உத்திரட்டாதி காமதேனுவின் நட்சத்திரம் ஆகும்

 நட்சத்திர காரத்துவம்:

ஆளும் உறுப்புகள்

கால்கள்

பார்வை

மேல்நோக்கு

பாகை

333.20 - 346.40

தமிழ் மாதம்

பங்குனி

நிறம்

வெண்மை

இருப்பிடம்

கிராமம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உறுதி

மிருகம்

பசு

பறவை

கோட்டான்

மரம்

பாலில்லாத வேம்பு மரம்

மலர்

சந்தன புஷ்பம்

தமிழ் அர்த்தம்

பின் மங்கள பாதம்

தமிழ் பெயர்

முரசு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

உளுந்து

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

வெல்ல சாதம்

தேவதை

அஹிர்புத்னியன் - சங்கு, சக்கரங்களைக் கைகளில் ஏந்தியவாறு காட்சியளிப்பவர்

அதி தேவதை

ஸ்ரீகாமதேனு

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

சதுர வடிவில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டது

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்

மற்ற பெயர்கள்

அரசு, கோ,மன்னவன், முறக, வரை, சீர், அரிவாள்

வழிபடவேண்டிய தலம்

சகஸ்ரலட்சுமீஸ்வரர்புதுகோட்டை

அதிஷ்ட எண்கள்

 5, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

அகஸ்தியா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

து, , , ஸ்

அதிர்ஷ்ட நிறங்கள்

நீலம், வெளிர்ப் பச்சை

அதிர்ஷட திசை

கிழக்கு

அதிர்ஷட கிழமைகள்

திங்கள், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

ப்ளாக் ஸ்டார்

அதிர்ஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

காமதேனு, ஜடாயு, ராகவேந்திரர், அருணகிரிநாதர், வேதாத்ரி மகரிஷி

குலம்

சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்