Showing posts with label Th. Show all posts
Showing posts with label Th. Show all posts

துலா ராசி வருட பலன்கள் - 2025

துலா ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü சனியின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடக்கப் பெறுவார்கள். மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்கும். நிதி பிரச்சனை இருக்காது. குரு பகவான் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தருவார்.

ü இந்த வருடம் உங்கள் பொருளாதார நிலையுடன் சேர்த்து சமூக அந்தஸ்தும் ஏற்றம் காணும் வகையில் தற்போதைய கோட்சார கிரக நிலைகள் உள்ளன.

ü திருமணத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்கொள்பவர்கள் பொருத்தமான துணையை கண்டுபிடித்து திருமணம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

ü குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணக்கமான உறவு இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

ü ஆராய்ச்சியைத் தொடரும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, ஆராய்ச்சிப் பணியிலும் வெற்றி பெறலாம்.

ü இந்த ஆண்டு புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரலாம். என்றாலும் குருவால் இதை சிறப்பாக செய்ய முடியும்.

ü இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ü அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்ற இறக்கமாக காணப்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

ü வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

ü மறைமுகமான திறமைகள் மூலம் பாராட்டுகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்குவார்கள்.

ü கடன் நிமித்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ü குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து, சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படுவதன் மூலம் அதிக நெருக்கம் ஏற்படும். வீடு தொடர்பான மாற்றங்கள் சிலருக்கு சாதகமாக இருக்கும்.



தொழில்



ü துலா ராசிக்காரர்களுக்க, 2025 ஆம் ஆண்டு வணிகக் கண்ணோட்டத்தில் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்

ü இந்த ஆண்டு ஐடி துறையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வரலாம். தனியார் துறையில் உள்ள மேலாளர்கள் பதவி உயர்வு மற்றும் அதிகரித்த வருமானம் இரண்டையும் காணலாம்.

ü பணியிடத்தில் இவர்களின் திறமையான செயல்பாடு மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படலாம். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.

ü ஏப்ரலில், அரசு வேலை அல்லது பதவியில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.

ü ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்குவதன் மூலம் தொழிலை விரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

ü மென்பொருள் உருவாக்குனர்கள் வணிக நோக்கங்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்

ü மார்ச் மாதத்திற்குப் பிறகு சனியின் பெயர்ச்சி இவர்களின் சிந்தனை மற்றும் திட்டமிடல் திறனை மேம்படுத்தும். மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குருவின் பெயர்ச்சியும் சாதகமாக மாறும். இந்த எல்லா காரணங்களால்வணிகம் நன்றாக இருக்கும். மூத்தவர்களிடம் நல்ல வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.

ü சொந்த தொழில் தொடர்பாக கூட்டாளிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு.

ü வேலை தேடிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ü உத்தியோகத்தில், திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த இடமாற்றம் இனி சாத்தியமாகும்.

ü வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். இதனால் வியாபார முன்னேற்றத்திற்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும். இடமாற்றம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான புதிய எண்ணங்கள் உங்களை ஊக்குவிக்கும்.

ü அரசியலில் இருபவர்களுக்கு புதிய உயர்வுகள் அடையும்படி கட்சியின் முக்கிய நபர்களிடமிருந்து அறிமுகம் மற்றும் ஆதரவு கிடைக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

குடும்ப வாழ்க்கை



ü துலாம் ராசியில் பிறந்தவர்கள், திருமண வயதை அடைந்தவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேடுபவர்களுக்கு இந்த ஆண்டின் பெரும்பகுதி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

ü ஆண்டின் முதல் சில மாதங்கள் மட்டும் சற்று சிரமம் தரலாம்.; அதற்கு பதிலாக, நிச்சயதார்த்தம் மற்றும் பிற விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். ஐந்தாம் வீட்டில் இருந்து சனியின் தாக்கம் முடிவடையும் போது ஆண்டின் இரண்டாம் பாதியில் சிறப்பாக இருக்கும்.

ü குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சில சமயங்களில் துக்கமும் இருக்கும். 2025 ஆம் ஆண்டின் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் பாசமும் இருக்கும்.

ü பொதுவாக குடும்ப வாழ்க்கையில் சண்டையும் அன்புன் நிறைந்த ஆண்டாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மூன்றாவது நபரால் வாழ்க்கை துணையிடம் நிறைய சண்டையிடலாம். சந்தேகம், கருத்து வேறுபாடு, இன்னல்கள் இருக்கும். ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். என்றாலும் குரு பகவான் சாதகமான பலன்களை தருவார்.

ü சனி 3ஆம் வீட்டை 10ஆம் பார்வையாக பார்ப்பதால் சகோதர சகோதரிகளின் உறவுகளுடன் சில பிரச்னைகள் உண்டாகும். இந்த ஆண்டை பொறுத்தவரை குடும்பத்துக்க நேரத்தை ஒதுக்க வேண்டும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நல்லது.

ü மே மாதத்தில் ராகு 6 ஆம் வீட்டிலிருந்து 5 ஆம் வீட்டிற்கு மாறுகிறார். இது நல்லது என்று சொல்ல முடியாது குருவின் துணையுடன் குடும்பத்தில் மோதல் இல்லாமல் பார்த்து கொள்ள முடியும்.

ü ஏப்ரல் 2025 வரை குரு பகவான் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதால், குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ü ராசி அதிபதியான சுக்கிரன், 2025 ஜூன் 29 முதல் 26 ஜூலை 2025 வரையிலும், 20 நவம்பர் 2025 முதல் 26 நவம்பர் 2025 வரையிலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்ல மதிப்பை கொடுப்பார்.

ü காதல் மற்றும் திருமண வாழ்க்கையை வலுப்படுத்த வேலை ராகு மற்றும் கேது பார்த்து கொள்ளும் என்று சொல்லாம். நல்ல புரிதலை கொண்டு வரும். இதன் கராணமாக வாழ்க்கை துணையிடம் காதல் அதிகரிக்கும்.

ü அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்ற இறக்கமாக காணப்படும். வீடு தொடர்பான மாற்றங்கள் சிலருக்கு சாதகமாக இருக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது நல்லது.

ü கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்காலம் சார்ந்த புதிய திட்டங்களில் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.



நிதி நிலை - பொருளாதாரம்



ü துலா ராசிகாரர்களுக்கு நிதியை பொறுத்த அளவில், சில மாதங்கள் நல்ல பலனையும் சில மாதங்கள் பலவீனமாகவும் சில மாதங்கள் கலவையான பலனையும் தருவதாக தெரிகிறது.

ü பல வருமான ஆதாரங்களில் இருந்து பணம் வரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

ü வருமானம் உயர்வதற்கான சாதக சூழல் இருக்கும். என்றாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ü மே நடுப்பகுதிக்கு முன்பே குருவின் செல்வாக்கு பண வீட்டில் இருக்கும். ஆனால் புதிய பணம் சம்பாதிப்பதில் சில சிரமங்கள் இருக்கலாம்.

ü நிதி பிரச்சனை இருக்காது. என்றாலும் வீட்டு பராமரிப்புச் செலவுகள் மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருக்கும்.

ü இந்த ஆண்டு முழுவதும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.

ü இந்த ஆண்டு ஆரம்பத்தில் தங்க நகை வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நல்ல லாபத்தைக் காணலாம். புதிய முதலீடுகள் மூலம் வெற்றியை அடையலாம். ஆலோசனைப் பணியின் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறலாம், இது நிதி மற்றும் சமூக அந்தஸ்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

ü பணம் சம்பந்தமாக அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் சொத்து சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ü துலா ராசி பெண்களுக்கு எதிர்காலத் தேவைகளுக்காக பணம் சேமிப்பது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சேமிப்புகளை அதிகப்படுத்துவார்கள்.

ü இந்த ஆண்டு வாகனங்களை வாங்குவதற்காக வாங்கிய கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும்.

ü சிலர் கமாடிட்டி வர்த்தகத்தில் முதலீடு செய்வது குறிப்பிடத்தக்க லாபத்தை இந்த வருடம் ஈட்டலாம்.

ü நீண்டகால விவசாயப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் பெறமுடியும்.

கல்வி - படிப்பு



ü துலாம் ராசிக்காரர்களுக்கு கல்வியின் பார்வையில் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவதாகத் தெரிகிறது.

ü என்றாலும் துலா ராசி மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் தெளிவு கிடைக்கும். வகுப்பறையில் தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது.

ü சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகள் கைகூடும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களும் நல்ல பலன்களைப் பெற முடியும். சில நுட்பமான விஷயங்களையும் கூட எளிதாக புரிந்து கொள்வார்கள்.

ü இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒப்பீட்டளவில் பலவீனமான முடிவுகளைக் காணலாம். ஆண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு கல்வி நிலையில் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம்.

ü மே மாதம் முதல் ஐந்தாம் வீட்டில் ராகு இருப்பது ஆரம்பக் கல்வியைத் தொடரும் மாணவர்களின் மனதை உயர்த்தும் அல்லது தொந்தரவு செய்யலாம். இதனால் தொடர்ந்து முயற்சியுடன் கல்வியில் நல்ல பலன்களைப் பெற முடியும்.

ü மதம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின் வரும் நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ü மருத்துவ முதுகலை படிப்புகளுக்குத் தயாராகி வருபவர்கள், நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், அவர்கள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்யவும் வாய்ப்புகள் அமையும்.

ü வெளிநாட்டில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவத் திட்டங்களில் சேரலாம்.

ü நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், அவர்கள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்யவும் வாய்ப்புகள் அமையும்.

ü அரசுப் பணியை இலக்காகக் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேலையைப் பெறலாம்.

ü கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கலாம், படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆரோக்கியம்



ü உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான மாற்றங்கள் வரக்கூடும். உடல் நலத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்சனைகள் குறைந்து, புத்துணர்ச்சி கூடும். இனிப்பு உணவுகளைத் தவிர்த்து, சீரான மற்றும் கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களை கையாள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.

ü உடல்நிலை பொதுவாக நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், காய்ச்சல், தலைவலி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படலாம்.

ü மார்ச் மாதம் வரை சனியின் பெயர்ச்சி வயிறு மற்றும் வாய் சம்பந்தமான சில பிரச்சனைகளை தரும்.

ü ஏப்ரல் மாதத்தில், நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

ü முதல் பகுதியில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது முக்கியம். அதன் பிறகு, முடிவுகள் படிப்படியாக மேம்படத் தொடங்கும்.

ü ஆரோக்கியத்தின் பார்வையில் ஆண்டின் ஏப்ரல் பிறகு சிறப்பாக இருக்கும். என்றாலும் ராகு, கேது பெயர்ச்சி சற்று சிரமம் தரும். கட்டாயம் தெரு உணவு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ü பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவு பிரச்சனையை உண்டாக்கும். அதிக எடை தூக்குவதைத் தவிர்க்கவும்; இல்லையெனில், நீங்கள் முதுகுவலி வர வாய்ப்பு உண்டு.


பரிகாரங்கள்



ü நடராஜ பெருமாளை வழிபட்டால், மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, வாழ்க்கையில் நன்மைகள் பெருகும்.

ü வெள்ளிக்கிழமை மாலை காமதேனு படம் அல்லது சிலைக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் செய்துவர உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும்.

ü புதன் கிழமைகளில் வயதான ஏழைகளுக்கு வஸ்திர தானம் கொடுக்க முயற்சிகளில் இருந்த தடை விலகும்.

ü மேலும் மகாவிஷ்ணு கோவிலில் புதன் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுத்துவர ஐஸ்வர்யங்கள் ஏற்படும்.

ü தேவைப்படும் நண்பர்கள் அல்லது வகுப்பு தோழர்களுக்கு உங்கள் முடிந்த உதவிகள் செய்யலாம்.

ü ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குவதால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லாம்.