எந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் பெண்களுக்கு அதிஷ்டமாக இருக்கும் ?
பெண் ராசிகளில் பிறக்கும் ஆண்கள் அன்பாகவும், அனுசரணையாகவும் இருப்பார்கள். இந்த வகையில் பெண் ராசிகள்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகும். இந்த ராசிகார ஆண்களை பற்றி இப்போது பாப்போம்
இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது
இது லக்கினத்திற்கும் பொருந்தும்
ரிஷபம்
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் அட்ஜஸ்ட் செய்பராக இருப்பார்கள். மேலும் இது நில ராசி ஆகும். எனவே சகிப்பு தன்மை, விட்டு கொடுக்கும் தன்மை இருக்கும். பெண்கள் சண்டை போட்டாலும் சற்று பொருத்து போகும் குணம் உண்டு.
கடகம்
இது ஒரு நீர் ராசி. நீர் கிழ் இருந்து வருவது (ஊர்வது). இயற்கையாகவே அன்பு உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் அன்பு தாய் அன்பு போன்றது என்றால் மிகையாகுது. ஏன்றால் சந்திரனை அதிபதியாக கொண்ட ராசி எனவே இது தாய் ராசி ஆகும்.
மனைவி கோபப்பட்டாலும் அவரை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் சகித்து கொள்வார்கள். விட்டு கொடுக்கும் குணம் உண்டு.
கன்னி
மிகவும் மனைவிக்கு கும்பத்திற்கு உதவியாக இருக்கும் ராசி ஆகும். உதாரணத்திற்கு கணவன் மனைவிக்கு பிரச்சனை என்றால் கன்னி ராசி ஆண்கள் விட்டு கொடுக்கும் தன்மை அதிகம் இருக்கும். பிரிவை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். பொறுத்து கொள்ளும் குணம் அதிகம். மனைவி மரியாதை தர வில்லை என்றாலும் பொறுத்து கொள்ளவார்கள்
விருச்சிகம்
"எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்" என்ற வார்த்தை ஏற்றவர் தான் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள். குடும்ப வாழ்க்கை இவர்களுக்கு பொறுமை இருப்பார்கள். உதராணத்திற்கு மனைவியை நீண்ட நாட்கள் பிரிந்தாலும் மனைவியை விட்டு கொடுத்து பேச மாட்டார்கள். அதாவது மனைவியுடன் எவ்வளவு சல சலப்பு இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் அவர்களுடன் சேரும் காலத்திற்காக பொறுமையாக இருப்பார்கள்
மகரம்
பொதுவாக மகர ராசி ஆண்கள் மனைவியுடன் அன்னோனியமாக வாழ்வார்கள். இவர்களுக்கு தொழில் கவனம் அதிகம் இருப்பாதால் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து போவார்கள். மனைவிக்கு அடங்கி குணம் இருக்கும்.
மீனம்
மீனம் ராசி ஆண்களை திருமணம் செய்த பெண்கள் அதிஷ்டமானவர்கள் என்றால் மிகையாகாது . மீனம் ஆண்கள் மீன் எப்படி வளைந்து நகருகிறதோ அதுபோல் மனைவியிடம் அனுசரித்து போவார்கள் . குடும்ப பிணைப்பு (family bonding) அதிகமாக இருக்கும்