Showing posts with label 2025 ஆம் ஆண்டு பொது பலன்கள். Show all posts
Showing posts with label 2025 ஆம் ஆண்டு பொது பலன்கள். Show all posts

விருச்சிக ராசி வருட பலன்கள் - 2025

விருச்சிக ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü விருச்சிக ராசிக்கு 2025 புத்தாண்டில் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுவார்கள். இனிமையான பேச்சு, நகைச்சுவை உணர்வால் பிறர் ஈர்க்கப்படுவார்கள்.

ü குடும்பத்திலும், பணியிடத்திலும் மற்றவர்களுடனான உறவை வலுப்படுத்துவார்கள். உத்தியோகத்தில் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

ü இவர்களின் வருமானம், சேமிப்பு உயரும். இவர்களின் முந்தைய கடின உழைப்பு, முதலீடுகள் மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

ü இந்த ஆண்டு, 2025, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள், நிலங்கள் அல்லது வாகனங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு சாதகமாக இருக்கும்.

üவாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடனான உறவு மேம்படும், மேலும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேணலாம்.

ü என்றாலும் அண்டை வீட்டாருடன் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம், ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது இந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும். ருக்கும்.

ü தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ü அரசுப் பணியாளர்கள், குறிப்பாக அமைச்சகங்களில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். அதிக பணிச்சுமை இருந்தபோதிலும், விடாமுயற்சியுடன் முயற்சி செய்தால் ஒதுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும், பாராட்டுகளைப் பெறவும் முடியும்.

ü நீண்ட நாட்களாக இருந்த தாமதங்கள் விலகி, நல்லவர்களின் நட்பு மற்றும் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

ü பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். நீண்டகாலமாக முடிவடையாமல் இருந்த சில பணிகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும்.

ü தூரப்பயண முயற்சிகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதளவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். அலைபாயும் சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும்.

ü பொருளாதார நடவடிக்கைகளில் கவனமாக இருப்பதன் மூலம் சேமிப்பு மேம்படும். சகோதர சகோதிரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். லுத்த வேண்டியிருக்கும்.

ü வாழ்க்கைத்துணையோடு மனம்விட்டுப் பேசுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

ü சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன், இருந்தால் அனைத்தையும் கட்டாயம் இந்த வருடம் வெல்லாம்.

ü வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ஒரு வழிகாட்டி அல்லது அந்த துறையில் அனுபவம் உள்ள ஒருவர் தேவைப்படுவார். அந்த ஒருவரை அடையாளம் காண முடியும்.

ü ராகு நான்காவது வீட்டிலும், கேது பத்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கும் வாய்ப்புள்ள வேலை மாற்றம். பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். செலவுகள் கூடும்.

ü பொதுவாக நான்காம் வீட்டில் ராகு சஞ்சரிப்பது தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் தாய் மற்றும் வீட்டுச் சூழலில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.



தொழில்



ü 2025 ஆம் ஆண்டின் படி விருச்சிக ராசிகாரர்களின் தொழில் கலவையான பலன்களை மாறி மாறி அனுபவிக்கும் நிலை உருவாகும்.

ü தனியார் துறையில் நிர்வாகப் பதவிகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ü உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதில் புதுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்களும், சிறிய செலவுகளும் வரக்கூடும்.

ü புதிய பணி சார்ந்த செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். என்றாலும் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ü ராகு நான்காம் வீட்டிலும் கேது பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது புதிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சாதகமான தருணம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ü மார்ச் மாதத்திற்குப் பிறகு சனியின் நிலை மாறுவதால்,வேலையில் திருப்தியாக இருக்கலாம் அல்லது பெரிய அளவில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, விஷயங்கள் இன்னும் கொஞ்சம் சவாலாக இருக்கும். தொலைதூரத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் அல்லது வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், இந்த காலகட்டத்தில் வெற்றியை அடையலாம்.

ü ஆண்டின் இரண்டாம் பாதி இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையவும் இதுவே நேரம் ஆகும்.

ü சனியின் பார்வை பலனானது உங்களது 6ஆம் வீட்டின் மீது விழுவதால் வேலையில் சில அதிருப்தி உண்டாகும். இது மார்ச் மாதம் வரையில் இருக்கும். அதன் பிறகு சனியின் பார்வை மாறுவதால் வேலையில் எந்த பிரச்சனையும் வராது. மேலும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

ü ராகு, கேது பெயர்ச்சிகள் சாதகமற்ற இடங்களில் பெயர்ச்சி ஆவதால், தொழிலில் மந்த நிலை ஏற்படும். தொழில் சார்ந்து மற்றவர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்க நேரிடும். அவர்களது ஆலோசனைப்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்.

ü சிலருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெற முடியும்.

ü விருச்சிக ராசியினருக்கு செய்யும் வேலையில் வெற்றியும், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் இந்த ஆண்டு கிடைக்கும். நம்பிக்கையுடன் எந்த வேலையையும் செய்து அதில் வெற்றியைப் பெறலாம்.



குடும்ப வாழ்க்கை



ü விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஆண்டின் முதல் பாதியில் குடும்ப விஷயங்கள் சுமூகமாக முடியும். இரண்டாவது வீட்டின் அதிபதியான குரு, மே மாதத்தின் நடுப்பகுதி வரை சாதகமான நிலையில் இருப்பார், இது வலுவான குடும்ப உறவுகளை பராமரிக்க உதவும்.

ü எட்டாம் வீட்டில் குரு நுழைவதால் மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு வலுவிழக்கச் செய்யும். இருப்பினும், குரு நான்காவது மற்றும் இரண்டாவது வீடுகளைப் பார்க்கிறார். எனவே, இது எந்த பெரிய முரண்பாடுகளும், ஆனால் பலவீனமாக இருப்பதால், சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü குடும்பத்திலும், பணியிடத்திலும் மற்றவர்களுடனான உறவை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

ü திருமணம் அல்லது குழந்தை பிறப்பில் தாமதம் உள்ளவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

ü தனிமையில் இருப்பார்கள், ஆண்டின் முதல் பாதியில் சாத்தியமான துணையை சந்திக்க நேரிடலாம். என்றாலும் காதல் உறவில் இருப்பவர்கள் சவாலான ஆண்டாக இருக்கலாம்.

ü புதுமணத் தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர அன்பு வளரும். இந்த வருடம் பல புதிய இடங்களுக்குச் செல்லலாம்.

ü 2025 ஆம் ஆண்டு உங்கள் காதல் உறவுகளுக்கு அற்புதமாக இருக்கும். பழைய விஷயங்களை மறந்துவிடுவது நல்லது.

ü விருச்சிக ராசியினருக்கு குருவின் அருளால் மே மாதத்திற்குள்ளாக திருமணம் பேச்சுவார்த்தையில் இருந்தால் திருமணம் சிறப்பாக நடக்கும். அதன் பிறகு குரு சாதகமற்ற நிலைக்கு செல்வதால், சிக்கல் ஏற்படும். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும்

ü மே மாதம் தொடங்கி நான்காம் வீட்டில் ராகுவின் தாக்கத்தால் சில தடங்கல்கள் இருந்தாலும், நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

ü மார்ச் மாதத்தில் தொடங்கி சனி இரண்டாவது வீடு வருவதன் விளைவாக, சில குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வு மற்றும் அதிருப்தி வர வாய்ப்பு உள்ளது. என்றாலும் இந்த ஆண்டு இல்லற வாழ்க்கை என்று பார்க்கும் போது சிறப்பான பலன்களைக் காணலாம்.

ü மார்ச் மாதத்திற்கு பிறகு சனியின் தாக்கம் நான்காம் வீட்டில் இருந்து விலகும், இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

ü 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஜாலியாக அனுபவிக்கலாம். அதன் பிறகு அடிக்கடி கணவன் மனைவி சண்டை, மற்ற பிரச்சனைகள் என்று திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை வராது.



நிதி நிலை - பொருளாதாரம்



ü 2025 ஆம் ஆண்டிற்கான விருச்சிக ராசிகாரர்களுக்கு பண விவகாரங்களில் கலவையான அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

ü இந்த ஆண்டு விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறந்ததாக இருக்கும். நிதித்துறையில் வெற்றி பெறுவார்கள். இந்த வருடம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கடினமாக உழைத்தால், பண பலன்கள் கிடைக்கும்.

ü சொத்து சம்பந்தமாக விஷயத்தில் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

ü வருமானம், சேமிப்பு உயரும். முந்தைய கடின உழைப்பு, முதலீடுகள் மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது.

ü முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு மிகவும் லாபகரமானதாகத் தோன்றுகிறது. பல்வேறு முதலீடுகளில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டலாம்.

ü மே 2025 முதல், வியாழன் விருச்சிக ராசிக்காரர்களின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார், இதன் காரணமாக நிதி விஷயங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ü குறிப்பாக ஆண்டின் முதல் பாதியில் வணிக உரிமையாளர்களுக்கு, இந்த ஆண்டு நிதி சிக்கல்கள் அல்லது பண நெருக்கடிக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கூடுதலாக, தொழில் கூட்டாளிகள் நம்பிக்கைக்குரியவராக இருப்பார்கள்.

ü கட்டிடம் அல்லது சொத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தால் இந்த ஆண்டு இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம்.

ü நான்காவது வீட்டிலிருந்து சனியின் தாக்கம் குறிப்பாக மார்ச் மாதத்திற்குப் பிறகு முடிவடையும்; இது நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான விவகாரங்களை விரைவுபடுத்த உதவும்.

ü மே மாதத்தில் ராகுவின் செல்வாக்கு நான்காவது வீட்டிற்கு மாறினாலும், விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்காது. சிறு இடையூறுகள் இன்னும் ஏற்படலாம். என்றாலும் நிலைமை சிறப்பாக இருக்கும் என்று தான் சொல் வேண்டும்.

ü லாப வீட்டின் அதிபதியான புதனால் இந்த ஆண்டின் பெரும்பகுதிக்கு சாதகமான பலன்கள் இருக்கும். புதனால் குறிப்பிடத்தக்க வருமானச் சிக்கல்கள் எதுவும் இருக்காது என்று சொல்லாம்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு, குருவின் பார்வையால் சேமிப்பு உயரும். மேலும் சம்பாதித்த பணத்தின் அடிப்படையில் சாதகமான விளைவுகளை உருவாக்கும்.

ü வருமானக் கண்ணோட்டத்தில், ஆண்டின் பிற்பகுதி கொஞ்சம் பலவீனமாக இருக்கும், ஆனால் சேமிப்புக் கண்ணோட்டத்தில், அது நன்றாக இருக்கும்.

ü இந்த வருடத்தில் நிதி முன்னேற்றம் இவர்களின் சமூக நிலையை உயர்த்தலாம். பிறருக்குக் கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், ஜூன் மாதத்திற்குப் பிறகு அவற்றைத் திரும்பப் பெறலாம்.



கல்வி - படிப்பு



ü கல்வியைப் பொறுத்தவரை, 2025ம் ஆண்டு விருச்சிக ராசிக்கு சாதாரணமான பலன்களை வழங்குவதாகத் தோன்றுகிறது.

ü என்றாலும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலம் வரை, குரு கிரகம் ஏழாவது வீட்டில் அமர்ந்து இருப்பதால் விருச்சிக ராசி மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.

ü மே 2025க்குப் பிறகு குரு எட்டாவது வீட்டிற்குள் நுழைவார், எனவே படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ü மாணவர்களுக்கு பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவுகள் சிறு சிரமங்களுக்கு பின் கிடைக்கும்.

ü முதுகலைப் படிப்பைத் தொடரும் பல்கலைக்கழக மாணவர்கள் நல்ல தரங்களைப் பெறலாம் மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறலாம்.

ü கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். தேவையற்ற உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது.

ü பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

ü மார்ச் 2025 முதல் சனி பகவான் விருச்சிக ராசிக்கு நான்காம் வீட்டின் அதிபதியாக ஐந்தாவது வீட்டில் அமர்வார். அத்தகைய சூழ்நிலையில், புதிய துறைகளில் உயர்கல்வி பெறுவதில் இவர்களின் ஆர்வம் எழும்.

ü நிழல் கிரகமான ராகு நான்காம் வீட்டுக்கும், கேது பத்தாம் வீட்டுக்கும் பெயர்ச்சிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், மாணவர்களின் செயல்திறன் கல்வியில் சிறப்பாக இருக்கும். இந்த வீட்டில் கேது இருப்பதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

ü உயர்கல்வி சேர்க்கை மற்றும் போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்.

ü மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு தங்கள் கனவு நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கும்.

ü இலக்கிய ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் படிப்பில் வெற்றி பெறலாம். தங்கள் ஆராய்ச்சித் திட்டத்தை முடித்த மாணவர்கள் வெளிநாட்டில் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளைப் பெறலாம்.



ஆரோக்கியம்



ü ஆரோக்கியம் என்று பார்க்கும் பொது விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருந்தாலும் சிறு சிறு ஆரோக்கிய தொல்லைகள் இருக்க தான் செய்யம்.

ü முதல் 3 மாதங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மார்பு தொடர்பான பிரச்சனை, இடுப்பு, மூளை, தலைவலி, முழங்கால் பிரச்சனை இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

ü ஒரு சில நோய் பிரச்சனைகள் சரியானாலும், புதிதாக உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படும். இந்த ஆண்டில் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

ü இந்த ஆண்டு உடல்நிலை நன்றாக இருக்கும். என்றாலும் உடல் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வதன் மூலம் இளைஞர்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அனுபவிக்கலாம்.

ü வயதான ஆண்கள் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ü உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். மாற்று மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகால இன்னல்கள் குறையலாம்.

ü விருச்சிகம் ராசியின் படி 2025, மார்ச் மாதத்திற்குப் பிறகு ராகு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் மார்பு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம்.

ü மார்ச் மாதத்திற்குப் பிறகு சனியின் சஞ்சாரம் மற்றவற்றுடன் இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். அதாவது, சில நீண்டகாலச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டாலும், புதியவை தோன்றக்கூடும்.



பரிகாரங்கள்



ü பொதுவாக ஹனுமானை வழிபடுவது விருச்சிக ராசிகாரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம். சனிக்கிழமை தோறும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர நல்ல பலனை அனுபவிக்கலாம்.

ü முடிந்தால் மாதத்திற்கு ஒரு முறை எனும் குல தெய்வ கோயிலுக்கு சென்று வருவது நல்ல பலனை அளிக்கும்.

ü முடிந்தவர்கள் வெள்ளி நகைகளை அணிந்து கொள்ளலாம். இது ஆரோக்கியத்தைக் மேம்படுத்தும்.

ü பத்ரகாளி அம்மனை வழிபடுவதால், மனதில் இருக்கும் பயம், சந்தேகம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கும்.

ü செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு நிற ஆடைகளை அணிந்து வருவது வெற்றியை கொடுக்கும்.

ü அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஆடைகளை வழங்குவது நல்லது.

ü திருமண வயதை உடைய பெண்களின் திருமணத்திற்காக தன உதவி செய்வது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யங்களை பெருக்கும்.

கன்னி ராசி வருட பலன்கள் - 2025

கன்னி ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü 2025 ஆண்டு, கன்னி ராசிக்கு அற்புதமானதாக இருக்கும். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 புத்தாண்டில் தெய்வங்கள், கிரகங்களின் ஆசி நிறைந்ததாக இருக்கும்.

ü எல்லா செயல்களில் வெற்றிக்கான அதிர்ஷ்டங்கள் நிறைந்திருக்கும். இந்தாண்டில் முன்னெடுக்கும் எந்த ஒரு முக்கிய வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

ü வருவாய் இல்லாமல் இருந்தவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டு.

ü ராகு 6க்கு வருவதால் சவால்களை தாண்டி வெற்றிக் கொடி நாட்ட முடியும். உடல்நிலை பாதிப்பு, கடன் துன்பம், எதிரிகள் பயம் தீரும். ராசியில் இருந்த கேது பகவான் 12ஆம் வீட்டுக்கு இடம்பெயர்வதால் நன்மைகள் உண்டாகும்.

ü உத்தியோகத்தில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் அமையும். அரசு வேலைக்குத் தயாராகக்குடிய நபர்களுக்கு வெற்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவால் வெற்றிகள் குவியும். மேலும் அவர்களின் ஆலோசனையால் நிதி நிலைமை மேம்படும்.

ü கன்னி ராசியினர் இந்த ஆண்டு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்று, வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடுவார்கள். எதிர்பாராத சவால்கள் வந்தாலும், தங்கள் திறமையால் அவற்றை எளிதில் சமாளிப்பார்கள்.

ü குடும்பத்தில் அமைதி நிலவும். 2025 ஆம் ஆண்டில் , வருமானம் உயரும். மேலும் நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள், வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும். மனதில் இருந்து வந்த தயக்கங்களும், பயமும் குறையும்.

ü நெருங்கிய நண்பர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வாக்குறுதிகளை கொடுக்கும் போது கவனம் தேவை .

ü வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும் மேலும் வழக்கு விஷயங்களிலும் விரும்பிய நல்ல பலன்களைப் பெறலாம்.

ü சனி 6ம் வீட்டிலிருந்து 7ம் வீட்டுக்கு செல்வது சில பலவீனமான பலன் கிடைக்கம். உறவுகளுடன், வாழ்க்கை துணையுடனும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். சிலருக்கு திருமணத் தடை நீங்கும்.

ü வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்கள் கல்வி உதவி பெறலாம் மற்றும் அவர்கள் விரும்பிய நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம்.

ü நண்பர்களுக்கு கடன் கொடுக்கும் போது கவனமாக இருங்க வேண்டும், ஏனெனில் பணத்தை திரும்பப் பெற முடியாமல் போகலாம், இது சாத்தியமான நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.



தொழில்



ü கன்னி ராசிக்காரர்களுக்கு வணிகக் கண்ணோட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சராசரி அல்லது கலவையான முடிவுகளைத் தரக்கூடும்.

ü ஆண்டின் முதல் பகுதியில் குரு 9ம் வீட்டில் இருப்பார். மிகவும் தொழில் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் வரும்

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு் பத்தாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிரர்ர். இது நல்லதாகக் கருதப்படுவதில்லை. ஆனாலும் பொறுமையுடனும் பழைய அனுபவங்களின் உதவியுடனும் பணிபுரிந்தால் நல்ல பலன்களைப் பெற முடியும்.

ü மார்ச் மாதத்திற்குப் பிறகு சனி ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இது வியாபாரத்தில் சிறிது மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இவை அனைத்திலும் சாதகமான விஷயம் என்னவென்றால் ராகு கேதுவின் தாக்கம் ஏழாவது வீட்டிலிருந்து முடிவடையும். இந்த ஆண்டு வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படலாம். ஆனால் அனுபவத்துடனும் உத்திகளுடனும் மூத்தவர்களின் வழிகாட்டுதலுடனும் செயல்பட்டால் நன்றாக வருமானம் ஈட்ட முடியும் .

ü புது வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மே மற்றும் ஜூன் மாதங்களில், நிதி தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

ü இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரும். அதிக பணிச்சுமை இருந்தபோதிலும், சிறப்பாகச் செயல் படமுடியும். மேலும் ஒதுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும் முடியும் .

ü தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறந்த செயல்திறனுடன் பணிபுரிந்து, மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். மேலும் இவர்களின் கீழ் பணிபுரிபவர்களை எளிதாக நிர்வகிப்பார்கள்.

ü கன்னி ராசி பலன் 2025 படி, வேலையை மாற்ற விரும்பினால், இந்த ஆண்டு சாதகமாக இருக்கும்.

ü இந்த ஆண்டில் வியாபாரத்தில் இருந்த சோர்வு மற்றும் மந்த நிலை படிப்படியாக குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் வியாபார வளர்ச்சி மேம்படும்.

ü உற்பத்தி தொடர்பான வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும்.

ü அரசியலில் இருப்பவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் உயரும். சிறிய வதந்திகள் ஏற்பட்டு மறையும்.

குடும்ப வாழ்க்கை



ü இந்த ஆண்டு குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய வீடு வாங்க இது ஒரு சிறந்த நேரம். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் இவர்களின் வளர்ச்சியை பெரிதும் ஆதரவாக இருப்பார்கள்.

ü இந்த ஆண்டு, காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் இருவருக்கும் இணக்கமான சூழ்நிலைகள் நிலவும்.

ü கன்னி ராசிக்காரர்களுக்கும் திருமணம் செய்ய முயற்சிப்பவர்களுக்கும் இந்த வருடத்தின் முதல் பகுதி ஓரளவு உதவிகரமாக இருக்கும்.எனவே, மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் திருமணப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்ய வேண்டும். திருமண முயற்சிகள் வெற்றியடையும் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்

ü 7ம் வீட்டில் சனி வருவதால் ஏதாவது ஒரு பிடிவாத உணர்வு இருக்கும் அல்லது வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சில பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.

ü வாழ்க்கை துணையிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். முடிந்தால், இந்த ஆண்டு வாழ்க்கை துணையுடன் ஒரு பயணத்தை மேற்கொள்ளவது நல்லது.

ü பங்காளி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

ü பெற்றோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவது நல்லது. தந்தை உடன் பேசும் போது கவனம் தேவை. சொத்து பிரிப்பதில் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உண்டு.

ü குரு பார்வை இரண்டாம் வீட்டில் விழுவதால் குடும்பத்தின் சூழ்நிலையை நன்றாக இருக்கும் என்றாலும் வேண்டுமென்றே எந்த பிரச்சனையும் பெரிதாகி விடாதீர்கள்.

ü மே மாதத்தின் நடுப்பகுதி வரை இல்லற விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு கவனக்குறைவால் இல்லற வாழ்வில் சில பிரச்சனைகள் வரலாம். எனவே, வீட்டு வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம்.

ü சில கலவையான பலன் இருந்தாலும், திருமணமான தம்பதியர்களுக்கு பொதுவாக இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சிறு செயல்களால் உறவில் அன்பையும் மரியாதையையும் சேர்க்க முடியும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொதுவாக நிதி விஷயங்களில் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்றவாறு நிதி சாதனைகளை தொடர்ந்துஅடைய முடியும்.

ü கன்னி ராசியின் லாப வீடு மற்றும் பண வீட்டில் எந்த எதிர்மறை கிரகத்தின் நீண்ட கால தாக்கம் இல்லை. எனவே வணிகம், தொழில் அல்லது வேலையில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல நிதிப் பலன்களைப் பெறுவார்கள்.

ü ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை செல்வத்தின் அடையாளமான குருவின் பெயர்ச்சி கன்னி ராசிகாரர்களுக்கு நல்ல அனுகூலத்தை தரும். இதற்குப் பிறகு குரு கர்மாவின் வீட்டில் இருப்பார் மற்றும் நான்காம் வீட்டைப் பார்ப்பார். இது பணத்தை சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் குரு உதவி செய்வார்.

üமேலும் சுக்கிரனின் பெயர்ச்சி செல்வத்தைப் பாதுகாக்க உதவும். இந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நிதி விஷயங்களுக்கு பொதுவாக சாதகமான பலன்களைத் தரும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü சிலர் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கு அதிக அளவு செலவு செய்யலாம். மேலும் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களுக்கு அதிக செலவு செய்யலாம், இது எதிர்கால ஆதாயங்களுக்கு நல்ல முதலீடாக இருக்கும்.

ü இந்த ஆண்டை பொறுத்த வரை கன்னி ராசிக்காரர்களுக்கு நிதியில் ஒரு வகையான முன்னேற்றத்தையே காண்பார்கள். புத்தாண்டில் முக்கிய முதலீடுகள், வர்த்தக திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகள் மிகுந்த நம்பிக்கையை உருவாக்கும்.

கல்வி - படிப்பு



ü கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொதுவாக கல்விக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நல்லதாக இருக்கும்.

ü இந்த ஆண்டு மாணவர்கள் கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் புதிய உயரங்களை அடைவார்கள். புதிய ஆராய்ச்சி மற்றும் சிந்தனைக்கு வழிவகுக்கும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ü தொழில்துறையில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் இருப்பதால், எதிர்காலத்தில் வலுவான நிலையை உருவாக்க முடியும்.

ü விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்; இது உடல் மற்றும் மன உறுதியை வளர்க்க உதவும்.

ü மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் தொழில்நுட்பத்திறனும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

ü புதிய ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த துறைகளில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று முன்னேற்றத்தை உருவாக்குவார்கள்.

ü ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை உயர்கல்வியின் காரணியான குருவின் பெயர்ச்சி முற்றிலும் சாதகமாக இருக்கும்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு பத்தாம் வீட்டுக்கு செல்வதால் தொழில்முறைக் கல்வி பயிலும் மாணவர்கள் சில கடின உழைப்புக்குப் பிறகு நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

ü மேலும் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி நல்லதாகக் கருதப்படும். ஆனால் மற்ற மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

ü பொதுவாக மே மாதத்திற்கு பிறகு கல்வியில் கடின உழைப்பின் குணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம்.

ü நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பொறியியல் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெறுவதில் வெற்றி பெறலாம். மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் வெற்றி பெற விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும்.

ü ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறலாம். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு கவனச்சிதறல்களை சந்திக்க நேரிடும், எனவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியம்



ü கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் ஆரோக்கியத்தின் பார்வையில் சற்று பலவீனமாக இருந்தாலும் பிற்பகுதியில் நல்ல பலனைத் தரலாம்.

ü பொதுவாக இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும், மேலும் தூக்கமின்மை பிரச்சனைகளும் குறைய வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்த இனிப்பு உணவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

ü வெளிநாட்டு பயணத்துக்கு திட்டமிடும்போது தேவையான உடைமைகளை சரியாகத் தேர்ந்தெடுத்து எடுத்து செல்லவும். கால்களில் சில நேரங்களில் சிறிய வலிகள் ஏற்படலாம், ஆனால் அவை விரைவில் சரியாகும்.

ü ஆரோக்கியத்தில் கடந்த ஆண்டு இருந்த சவால்கள் குறையும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தவிர்க்க இயலாத சிக்கல்கள் இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால் இந்த ஆண்டு சிறப்பாக அமையும்.

ü புதிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, சரியான உணவுப் பழக்கம் மற்றும் யோகா பயிற்சிகள் போன்றவை தேவை. குறிப்பாக இடுப்பு அல்லது கீழ் முதுகில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், கவனக்குறைவு இல்லாமல் முறையான சிகிச்சை மற்றும் முறையான உணவு முறையை கடைப்பிடிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

ü வேலை செய்வதோடு, ஆரோக்கியமாக இருக்க ஓய்வும் தேவை.எந்த ஒரு நாள்பட்ட நோயும் இந்த ஆண்டு் தொந்தரவு செய்யாது. எனவே எல்லா வகையிலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.

ü இந்த ஆண்டை பொறுத்து வரை பெரிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பில்லை.

ü என்றாலும் மே மாதத்தில், வயதான பெண்களுக்கு முதுகுத் தண்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

ü பல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆரம்ப மருத்துவ சிகிச்சையானது பல் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக மீள உதவும்.

ü இந்த ஆண்டு பொறுத்தவரை முழுமையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நல்லபடியாக அனுபவிக்க முடியும்.


பரிகாரங்கள்



ü புதன் கிழமைகளில் மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர தொழிலில் ஏற்றம் உண்டாகும்.

ü பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்து வந்தால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

ü தினமும் கணபதி வழிபடுவது மிகவும் நல்லது.

ü காளி அம்மன் வழிபாடு மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ü முடிந்தவர்கள் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்தது சைவ உணவை மட்டும் உட் கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.

ü கடினமான சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்ள தினமும் குங்குமத்தை நெற்றியில் இட்டு கொள்ளலாம்.

ü மகாலட்சுமி ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர ஐஸ்வர்யம் பெருகும்.