Showing posts with label யார் அதிபதி. Show all posts
Showing posts with label யார் அதிபதி. Show all posts

ஜோதிடம் பாடம் -1 பக்கம் -4


அடுத்தாக ராசியைப் பற்றியும் ராசி அதிபதிகளின் பெயர் பார்ப்போம்.

12 ராசிகளில் (12 zodiac) 27 நட்சத்திரங்கள் (27 Nakshatras-Stars) நாம் முன்னோர்கள் அடைத்து வைத்தார்கள்.

(Rahu, Kethu) ராகு கேதுக்கு சொந்த வீடு (Own houses or Place in zodiac) கிடையாது. அவர்கள் ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் வீடுதான் அவர்களுக்கு சொந்த வீடு . எந்த வீட்டுக்கு யார் அதிபதி என்பதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்


ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும் கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி பார்ப்போம் .

ஒரு கிரகம் (Planet) எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அதற்கு 7-ம் வீட்டில் அவர் நீச்சம் பெறுகிறார். உதாரணமாக சூரியன் (Sun)மேஷத்தில் (Mesham) உச்சம் பெறுகிறார். மேஷத்தில் இருந்து 7-ம் வீடான (மேஷத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்), துலாத்தில் அவர் நீச்சம் பெறுகிறார்.

முன்புறம்