Showing posts with label மகர ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts
Showing posts with label மகர ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts

மகர ராசி வருட பலன்கள் - 2025

மகர ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü மகர ராசி 2025ன் படி, இந்த ஆண்டு தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை கொண்டு வரலாம். இருப்பினும், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம்.

ü இந்த வருடம் பழைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். உத்தியோக மாற்றம் செய்ய வாய்ப்பு வரும். தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும். சின்ன சின்ன இடையூறு இருக்கும். நிதி மற்றும் குடும்ப விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ü மகர ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முற்பகுதியை காட்டிலும், ஆண்டின் பிற்பகுதி மிகவும் சாதகமாக இருக்கும்.

ü புதிய வீடு வாங்கி நீண்ட நாட்களாக கிரகபிரவேசம் செய்யாமல் இருந்த மகர ராசியினர் இனி கிரகபிரவேசம் செய்வார்கள்.

ü வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆணமகர ராசிகளுக்கு அற்புதமானதாக இருக்கும்.

ü என்றாலும் சொத்து, வேலை உள்ளிட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும்போது கவனம் தேவை. ஏற்படுத்தும் சனி மற்றும் குரு பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். துணிச்சலும் உறுதியும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

ü நீதிமன்ற வழக்குகளில் இவர்களுக்கு சார்பாக தீர்ப்புகள் வரும். பணியிடத்தில் நல்ல மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும்.

ü 2025 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ü இந்த ஆண்டு, மகர ராசிக்காரர்கள் ஆற்றல் மற்றும் மாற்றத்தை அனுபவிக்கும், வழியில் நல்ல ஆச்சரியங்கள் நடக்கும்.

ü மே மாதத்தில் குரு மிதுன ராசிக்குள் நுழையும் போது, பெரிய இலக்குகள் மிகவும் அடையக்கூடியதாக உணரத் தொடங்கும், மேலும் வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்த உதவும் சில ரகசியங்களை கண்டறியலாம்.

ü மூன்றாவது வீட்டில் சனி இருப்பது சாதகமான பலன்களைத் தரும், ஆறாவது வீட்டில் வியாழன் நிலை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரண்டாம் வீட்டில் ராகுவும் எட்டாமிடத்தில் கேதுவும் இருப்பது சவால்களை ஏற்படுத்தும்



தொழில்



ü மகர ராசிக்காரர்களே, தொழில் ரீதியாக, 2025 உங்களுக்கு சாதகமாக இருக்கிறது, இருப்பினும் சவால்கள் நிறைந்தது இருக்கும்.

ü மகர ராசிக்காரர்களுக்கு, 2025 தொழில் விஷயங்களில், குறிப்பாக மார்ச் மாதத்திற்குப் பிறகு சிறப்பான பலன்களைத் தரும்

ü இந்த ஆண்டு மார்ச் பிறகு மகர ராசியினருக்கு நிலம், கட்டிடம், வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் வேலை பொதுவாக சாதகமாக இருக்கும்.

ü சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் இதுவரையில் இருந்த தடை, தாமதங்கள் இனி இருக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களால் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

ü வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும். அடுத்தடுத்த கட்டத்திற்கு சொல்லவும் முடியும். சொந்தமாக பிஸினஸ் செய்ய மகர ராசிகரர்களுக்கு கடனுதவியும் கிடைக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். கவனம் தேவை.

ü வேலை தேடுபவர்களாக இருந்தால், செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். மேலும் வணிகர்களுக்கு சாதகமான கிரக வரிசையுடன் நம்பிக்கையளிக்கும். புதிய முயற்சிகள் இந்த ஆண்டின் இறுதி சரியான நேரமாக இருக்கலாம்.

ü உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றபடி அனுசரித்து செயல்பட வேண்டும். சக ஊழியர்களுடன் சில விஷயங்களை பகிர்வதற்கு முன்பு, அவர்களின் தன்மையை அறிந்து கொண்டு நடப்பது நல்லது.

ü இந்த ஆண்டு இவர்களின் மீதான நம்பிக்கையில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உருவாகலாம். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொண்டால், பணி மேம்படலாம்.

ü உயர் அதிகாரிகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். வேலை மாற்றம் பற்றி யோசித்து முடிவெடுப்பது நல்லது.

ü கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்றபடி கருத்துகளை பகிர்வதால் நன்மை கிடைக்கும். வேலையாட்களை ஊக்குவித்து செயல்படுத்துவது வியாபாரத்திற்கு சாதகமாக அமையும்.

ü வாகன உதிரிப்பாகங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிரியாக இருந்தவர்கள் விலகுவர்கள். விவசாயத் துறையில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. சிறு தொழில்கள் மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான பலன்கள் பெறுவார்கள்.

ü கலை துறையில் இருப்பவர்கள் திறமைக்கான பாராட்டுக்கள் மற்றும் துறை சார்ந்த அனுபவம் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றங்கள் காணப்படும்.

ü அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளுக்கேற்ற முன்னேற்றம் மற்றும் உயர்வு கிடைக்கும். கட்சி பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். செயல்பாடுகளில் சில தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும், சிந்தனையில் கவனம் தேவை.

குடும்ப வாழ்க்கை



ü மகரம் 2025 ஜாதகத்தின்படி, உங்கள் தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், ஆனால் அது ஒட்டுமொத்த வீட்டுச் சூழலைப் பாதிக்காது.

ü இந்த ஆண்டு, நண்பர்களை, நெருங்கியவர்களை கூட நம்புவதைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பின்மை மற்றும் பாதிப்புகளை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ü மேலும் நண்பர்களுடன் எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் தவிர்க்க முயற்சிக்கவும். தொலைதூர உறவினர்களுக்கும் இது பொருந்தும்.

ü 2025 ஆம் ஆண்டின் முதல் பாதி காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். என்றாலும் குரு மற்றும் ராகு பெயர்ச்சியால் சிறிய சிறிய பிரச்சனைகள் ஏற்படும்.

ü திருமண வயதை எட்டிய மகர ராசியினருக்கு இந்த 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு சாதகமான பலனைத் தரும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதன் பிறகு நிச்சயார்த்தம், திருமணம் என்று அடுத்தடுத்து நடந்து முடியும். எனினும், தாம்பத்திய உறவில் விழிப்புணர்வு தேவை.

ü மார்ச் மாதத்திற்குப் பிறகு, சனி ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் மேலும் குருவும் ஆறாம் வீட்டுக்கு மாறுவதும் மகர ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சில சிறிய இடையூறுகளை ஏற்படுத்தும். இந்த சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்றாலும் சிறிய வாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க வேண்டும்.

ü ஒட்டுமொத்தமாக, திருமண வாழ்க்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று சொல்லாம். என்றாலும் , விழிப்புணர்வைப் பேணுவதும், முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு நடைமுறை முயற்சிகளை மேற்கொள்வதும் கட்டாயம் ஆகும்.

ü புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

ü சகோதர, சகோதர்களின் ஒற்றுமை மேலோங்கும். காதல் கைகூடும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடக்கும். இவர்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்கும்.

ü குடும்பம், தனம், திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள்.

ü பெண்களுக்கு மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். பாகப்பிரிவினை விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்

ü வாழ்க்கை துணையுடன் சிறு பயணங்களைத் திட்டமிடுவது நல்லது. சரியான அணுகுமுறையுடன், இந்த ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு நீடித்த மகிழ்ச்சியையும் காதலில் நிறைவையும் தரும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü மகர ராசிக்காரர்களின் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சனி உங்கள் மூன்றாவது வீட்டில் அமர்வதால், மகர ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும்.

ü அதாவது மகர ராசியினருக்கு ஏழரை முடியும் நிலையில் நிதிநிலை சீராகும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

ü சிலர் புதிதாக தொழில் தொடங்கி லாபம் ஈட்டுவார்கள். முதலீடு செய்யும் எண்ணம் மேலோங்கும். செலவு குறையும், வருமானம் அதிகரிக்கும். இனி கடனே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். மேலும் சேமிக்கவும் முடியும்.

ü என்றாலும் தேவை இல்லாத செலவுகள் அதிகமாகும். எனவே பணத்தை செலவழிக்க வேண்டிய இடத்தில் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

ü பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மே 2025 க்குப் பிறகு குரு ஆறாவது வீட்டில் பெயர்ச்சிப்பதால் வண்டி, வாகனம், வீடு, நிலம் என்று வாங்கும் யோகமும் உண்டாகும்.

ü என்றாலும் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

ü சொத்து சம்பந்தமான தகராறுகள் இருந்தால் , முடிவு இவர்களுக்கு சாதகமாக வரலாம். மேலும் கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்டாயம் கடன் கிடைக்கும். என்றாலும் தேவையான அளவுக்கு மட்டும் வாங்கவும்.

ü மேலும் குரு, மற்றும் ராகு , கேது சாதகமாக இல்லாததால் நிதி விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க கூடாது. இல்லையெனில், வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கல்வி - படிப்பு



ü மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் அதாவது ஏப்ரல் மாதம் வரை கல்விக்குக் காரணமான குரு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மகர ராசி மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். என்றாலும் கல்வியில் உங்கள் செயல்திறன் உங்கள் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும்.

ü சனி பெயர்ச்சிக்கு பிறகு கல்வித் துறையில் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், மற்றவர்களை விட உங்களை முன்னிலைப்படுத்தவும் செய்யும்.

ü மாணவர்கள் இந்த ஆண்டில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறைந்து படிப்பில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்

ü உயர்கல்வியை தொடர விரும்புபவர்களுக்கு 2025 மே மாதத்திற்கு முந்தைய காலம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

ü ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சிக்கு பிறகு படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதுகலை கல்வியில் கவனமுடன் செயல்படுவது முக்கியம். தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் படிப்பில் பின் தங்கலாம்.

ü ஏழாரை சனியின் தாக்கம் நீங்குவதால் மாணவர்கள் படிப்பில் புத்திச்சாலியாகவும், திறமைசாலியாகவும் விளங்குவார்கள்.

ü ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான காலகட்டம். வெளிநாட்டிற்கு சென்று படிக்க வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டில் அல்லது வெளியூரில் படிக்கும் மாணவர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

ü உடல்நலம் சாதகமாக இருந்தால், படிப்பில் கவனம் செலுத்த முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

ü பொதுவாக 2025 ஆண்டு மகர ராசியில் பிறந்த மாணவர்களுக்கு வளர்ச்சிக்கான ஆண்டாக தான் இருக்கும்.

ஆரோக்கியம்



ü மகர ராசிக்காரர்களுக்கு முந்தைய ஆண்டை கணக்கிட்டு பார்க்கும் போது இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். என்றாலும் மிக சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ü இந்த ஆண்டு பெரிய அளவில் உடல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தைரியமாக இருக்கலாம். என்றாலும் உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ü குருவின் பெயர்ச்சி மே மாதத்தின் நடுப்பகுதி வரை ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களைத் தரும். ஆனால் இடையில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம்.

ü ஏற்கனவே வாய், வயிறு, பிறப்புறுப்பு மற்றும் மார்புப் பகுதி தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆண்டும் கவனமாக இருக்க வேண்டும்.

ü இந்த ஆண்டு உடற்பயிற்சி செயல்களில் ஆர்வம் உண்டாகும்.

ü மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டில் ராகுவின் தாக்கம் இருப்பதால் ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்திற்கு வழி வகுக்கும். கவனம் அவசியம்.

ü இந்த ஆண்டு மன உளைச்சல் இருக்கும். எனவே ஒற்றைத் தலைவலி, பிபி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

ü சனி பெயர்ச்சிக்கு பிறகு உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள் சற்று குறையும் என்று சொல்ல தான் வேண்டும். என்றாலும் மற்ற வேலைகளை போல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ü கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ü 2025 மே மாதம் பிறகு, மகர ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


பரிகாரங்கள்



ü சொந்த வீடு கட்ட விரும்பும் மகர ராசிக்காரர்கள் பாலசுப்பிரமணியரைக் மனமுருகி வேண்டினால் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும். மேலும் நினைத்த காரியங்களில் வெற்றி காணலாம்.

ü சனிக்கிழமை தோறும் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்து விளகேற்றி வரலாம்.

ü முடிந்தவர்கள் பௌர்ணமி நாட்களில் சத்திய நாராயண பூஜை செய்யலாம்.

ü பொதுவாக மகர ராசிக்காரர்களுக்கு அனுமன் மற்றும் சிவபெருமானை வழிபடுவது மங்களகரமானது.

ü செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

ü மாணவர்களின் கல்விக்கு ஏதாவது முடிந்ததை தரலாம்.

ü அருகில் இருக்கும் குரு ஸ்தலத்திற்கு வியாழ கிழமை அன்று சென்று வழிபாடு செய்யலாம்.