சித்தர்கள் யார்
"சித்தர்" என்ற சொல்லுக்கு
சித்தி பெற்றவர் என்பது பொருள். மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு
உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும்
இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர்.
இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் (அட்டாங்க யோகம்) மூலம் எண்
பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். இந்த 8 வகையான யோகாங்கம் விளக்கத்தை
பார்ப்போம்.
1. இயமம் - கொல்லாமை,
வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
2. நியமம் - நியமம் ஆவது நல்லவனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
3. ஆசனம்- உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
4. பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது
பிராண வாயுவை சீா்படுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
5. பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே
நிறுத்திப் பழகுதலே ஆகும்.
6. தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு
இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
7. தியானம் - தியானம் என்பது மனதை ஒரு படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
8. சமாதி - சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்
சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள்.
தங்கள் இருப்பை, உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை, அறநிலைய உணர்வை, மெய் அடைதலை
சித்தி எய்தல் எனலாம். சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள்
உண்டு. அந்த சித்தர்களைப் பற்றி இந்த புத்தகத்தில் பாப்போம்.
பதினெண்
சித்தர்கள்:
18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை
நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி,
யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். வருங்காலம் அறிந்த சித்தர்கள்
ஜோதிடத்தை தம் நூல்கள் விளக்கமாக எழுதி உள்ளனர்.
பல சித்தர்கள். ஞானிகள் சித்தர்கள்
எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள். நூல்கள் 18 சித்தர்கள்
இவர்கள் என்று வரிசைபடுத்தி உள்ளது. அவற்றில் சில வித்தியாசம் உண்டு. அந்த வரிசையில்
நாம் எடுத்துக் கொண்டது
- அகத்தியர்
- திருமூலர்
- இராமதேவர்
- இடைக்காடர்
- தன்வந்திரி
- வால்மீகி
- கமலமுனி
- போகர் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- மச்சமுனி
- கொங்கணர்
- பதஞ்சலி
- நந்திதேவர்
- சிவவாக்கியர்
- பாம்பாட்டிச் சித்தர்
- சட்டைமுனி
- சுந்தரானந்த தேவர்
- கோரக்கர்
சரி இப்போது முன் முதல் கடவுளாம்
விநாயகரை வணங்கி இந்த பதினெண் சித்தர்கள் பற்றி
அறியலாம் வாருங்கள் !!!