Showing posts with label தனுசு ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts
Showing posts with label தனுசு ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts

தனுசு ராசி வருட பலன்கள் - 2025

தனுசு ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü 2025ம் ஆண்டு தனுசு ராசிக்கு பல நல்ல மாற்றங்களைத் தரும். இந்த ஆண்டு புதிய முயற்சிகள், திட்டங்கள் மற்றும் ஆக்கபூர்வமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ü தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு 2025 புத்தாண்டில் பல விதத்தில் சுப பலன்கள் ஏற்படும். குருவின் நேரடி பார்வையும், மூன்றாம் வீட்டில் ராகுவும், 4ல் சனி ஆகிய அமைப்பின் காரணமாக இவர்ளுக்கு பலவிதத்தில் நன்மைகள் நடக்கும்.

ü இவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காணலாம். தடைப்பட்ட வேலைகளை முடிக்க முடியும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும்.

ü குரு மற்றும் சனி, பெயர்ச்சி காரணமாக கலவையான பலன்களை சிலருக்கு அமையும்.

ü என்றாலும் ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.

ü கடந்த கால முயற்சிகள் நல்ல பலனைத் தர தொடங்கும். பணித் துறையில் வெற்றியை தரும். அவமதிக்க வேண்டாம்.

ü வருமானம் மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். இந்த ஆண்டு புதிய வீடு வாங்கும் வாய்ப்பும் உள்ளது.

ü தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். அதிக பணிச்சுமை இருந்தபோதிலும், பணிகளை சரியான நேரத்தில் முடித்து, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவும் முடியும்.

ü குழந்தைப்பேறு வேண்டி காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு குழந்தை தொடர்பான அதிர்ஷ்டம் கூடும்.

ü கணவன் மனைவி உறவில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பரஸ்பர புரிதல் அதிகரித்து, அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும்.

ü மே 2025 முதல், ராகு தனுசு ராசியின் நான்காவது வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் புதிய விஷயங்களைச் செய்வதற்கான விருப்பங்கள் அதிகரிக்கும்.

ü ஆன்மீக நாட்டம் அதிகரிக்க கூடும். யாத்திரை செல்லும் வாய்ப்பும் அமையும். பெற்றோரையோ அல்லது குருவையோ அவமதிக்க வேண்டாம்.



தொழில்



ü தனுசு ராசிகாரர்களுக்கு வணிகத்தில் இந்த ஆண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருக்கும், மேலும் ஆண்டின் இரண்டாம் பாதி மேலும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லாம். அதாவது வியாபரத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் வளர்ச்சி காணுதல் என்று இருக்கும், எனவே வணிகத்தை பொறுத்தவரை ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும் எனலாம்.

ü வணிகத்தை விரிவாக்கம் செய்யும் போது ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

ü வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.

ü பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள், வணிகத்தில் புதிய வாய்ப்புகளைத் தரும்.

ü உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கை நழுவிய வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

ü கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகளும் வாய்ப்புகளும் உருவாகும். மேலும் செல்வாக்கும் வருமானமும் உயரத் தேவையான சூழ்நிலைகள் உருவாகும்.

ü வேலை இல்லாத இளைய வயதினருக்கு வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் வேலையை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.

ü பலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். எனினும் வேலையில் சில சிரமங்கள் ஏற்படக் கூடும். வேலை மாற்றும் உண்டாகவும் வாய்ப்பு உண்டு.

ü சனி, ராகு, கேது பெயர்ச்சியால் சில தாக்கங்கள் வேலையில் ஏற்படலாம் மற்றும் தொழிலில் பாதிப்பு ஏற்படலாம். என்றாலும்குரு 7ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு பொறியியல் துறையில் வல்லுநர்கள் தங்கள் வணிகத்தின் மூலம் கணிசமான லாபத்தைப் பெறலாம். புதிய முயற்சிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

ü தனியார் துறையில் உணவு ஏற்றுமதி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுத் துறையில் அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.

குடும்ப வாழ்க்கை



ü 2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் முன் பாதியில் ஓரளவு சாதகமான பலனையும், பின் பாதியில் நல்ல பலன்களையும் பெறுவார்கள்.

ü தனுசு ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை துணையும் புத்திச்சாலித்தனமாக நடந்து கொள்வார்கள். சுக்கிர பகவான் ஆண்டு முதல் சாதகமான நிலையில் இருப்பதால், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ü திருமண வாழ்க்கையை பொறுத்தவரை இந்த ஆண்டு முன் பகுதியை விட பின் பகுதி தான் நல்ல பலனை கொடுக்க போகிறது.

ü மேலும், திருமணத்திற்காக காத்து இருப்பவர்கள் மே மாதத்திற்கு பிறகு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

ü 2025 ஆண்டில் வாக்குச் சாதுரியத்தின் மூலம் தனுசு ராசிக்காரர்கள் பலரின் மனதை கவர்வார்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பதால், நன்மதிப்பு உயரும். எதிர்பாராத பயணங்கள் புதிய அனுபவங்களை தரும்.

ü உறவினர்கள் சில பிரச்சனைகளை ஏற்படுட்டாலும் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து , அதை கடக்க முடியும்..

ü சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காண்லாம்.

ü ஆன்மீக பயணத்தை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற ஆண்டு எனலாம்.

ü காதல் உறவுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது உங்கள் அன்பை மேம்படுத்தும்.

ü குழந்தைப்பேறு வேண்டி காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்குப் பிறகு குழந்தை தொடர்பான அதிர்ஷ்டம் கூடும்.

ü இந்த வருடம் ஜூலை மாதத்திற்கு பிறகு வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

ü கணவன் மனைவி உறவில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பரஸ்பர புரிதல் அதிகரித்து, தம்பதியருக்கு இடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும்.

ü புதுமணத் தம்பதிகளுக்கு, இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü 2025 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 6ஆம் வீட்டில் இருப்பதால் நிதி நிலை பெரிதாக இருக்காது. என்றாலும் அவர் 2ம் வீட்டை பார்ப்பதால் ஓரளவு சாதகமாக பலன் கிடைககும் எனலாம்.

ü இந்த 2025 ஆம் ஆண்டு நிதி நிலையைப் பொறுத்த வரையில் சனி, குரு பெயர்ச்சி காரணமாக கலவையான பலன்கள் தான் கிடைக்கப் பெறும். முதல் பாதியில் சேமித்து வைத்தால் பின் பாதியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ü மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குருவின் நிலை வலுவடையும். மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு லாப வீட்டைப் பார்த்து நல்ல வருமானத்தைப் பெறலாம்.

ü மார்ச் 2025 இறுதியில், சனி பகவான் உங்கள் நான்காவது வீட்டிற்கு மாறுவார். இதன் விளைவாக, செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ராகு மற்றும் கேது் நிதி நிலைமையை சமன்படுத்தும் முயற்சியை செய்வார்..

ü தனுசு ராசிக்காரர்கள் தங்கள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். இல்லையெனில் இவர்களின் வசதிகள் குறையக்கூடும், இதனால் கடன் வாங்க வேண்டிய சூழல்நிலை வரலாம். கவனம் அவசியம்.

ü விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த ஒரு தவறான செயலில் இறங்க வேண்டாம்.

ü தனுசு ராசிகார்ர்களின் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் எதிர்பாராத செலவுகள் நிறைய வரும்.

ü வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு அதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ü சில எதிர்பாராத செலவுகள் இருக்கும், ஆனால் ஆண்டின் இரண்டாம் பாதி பாதுகாப்பானதாக இருக்கும், மேலும் வங்கி இருப்பு சற்று உயர்வதை காணலாம்.

ü பொதுவாக 2025ஆம் ஆண்டு நிதி நிலை சவாலானதாக இருக்கும். ஆனால், சிறிது விவேகத்துடன் நிர்வகித்தால், நிதி நெருக்கடியைத் தவிர்க்கலாம்.



கல்வி - படிப்பு



ü தனுசு ராசிக்காரர்களுக்கு கல்வியைப் பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு சராசரியை விட ஓரளவு சிறந்த பலனைத் தரும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை ஆறாம் வீட்டில் குரு பெயர்ச்சிப்பது போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

ü மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான ஆர்வமும், எண்ணங்களும் உருவாகும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நல்லது. மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

ü கவிதை, கட்டுரை தொடர்பான போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவார்கள். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

ü தனுசு ராசி பலன் 2025 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியால் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். சனி பெயர்ச்சியின் காரணமாக படிப்பில் கவனம் செலுத்தும் திறன் பலவீனமாக இருக்கலாம் மேலும் மனம் படிப்பிலிருந்து விலகலாம்.

ü என்றாலும் குரு ஏழாவது வீட்டில் பெயர்ச்சிப்பதால் மே 2025 க்குப் பிறகு காலம் உயர் கல்வியின் பார்வையில் பார்க்கும் போது பயனுள்ளதாக இருக்கும். இதன் விளைவாக, உயர் கல்வியைத் தொடர விரும்பவர்கள், இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ü பொதுவாக சனி மற்றும் ராகு பெயச்சியால் இந்த ஆண்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தொடர்ந்து உழைக்க வேண்டும். ஆண்டின் இறுதியில் கல்வியில் சிறிது தடை ஏற்படலாம் கவனமாக இருக்க வேண்டும்.



ஆரோக்கியம்



ü உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்தையின் ஆரோக்கியம் குறித்து சற்றே கவனம் செலுத்துங்கள்.

ü சிந்தனையில் தெளிவு கொண்டு செயல்பட வேண்டும். எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகளை தேர்வு செய்யவது மிகவும் நல்லது. அதிக நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்க்கவும்.

ü சனி பெயர்ச்சியின் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். நெஞ்சு, இதயம், நுரையீரல் சம்மந்தமான ஏற்கனவே தொந்தரவில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

ü என்றாலும் ராகு பெயர்ச்சி ஆவதால் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். சனிபகவானால் பாதிப்புகள் ஏற்பட்டால்கூட குரு பகவான் அருளால் சரியாகும் .

ü மே மாதம் முதல் ராகுவின் பெயர்ச்சி நான்காம் வீட்டில் இருந்து விலகுவதால் பிரச்சினைகள் குறையும். ஆனால் ஏப்ரல் முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

ü மே 2025 யில் குரு ஏழாவது வீட்டிற்குச் செல்கிறார், பின்னர் இவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்டு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

ü பெண்கள் இந்த ஆண்டு உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். சிறந்த ஆரோக்கியத்திற்காக உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை சேர்க்க வேண்டும்.

ü மேலும் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.



பரிகாரங்கள்



ü வியாழக்கிழை தோறும் குரு வழிபாடு செய்யவது நல்லது. மேலும் பசுவிற்கு தீவனம் அல்லது பழம் வாங்கி கொடுக்க வேண்டும். மேலும் “ஓம் குருவே நமஹ” என்று தினமும் 21 முறை சொல்லாம்.

ü குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும் சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

ü செவ்வாய்கிழமை கேது கிரகத்திற்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்லது.

ü சனிக்கிழமையில் மாற்றுத்திறனாளிகள் அல்லது தூய்மைப் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

ü வசதி வாய்ப்பு இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையோ சிவன் கோயிலில் சென்று அன்னதானம் கொடுக்கலாம்.

ü ஏழை மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது தன நிலையை உயர்த்தும்.

ü வீட்டு அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்று வழிபாடு செய்து வருவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.