Showing posts with label சிம்ம ராசிக்கான புத்தாண்டு பலன்கள்- 2025. Show all posts
Showing posts with label சிம்ம ராசிக்கான புத்தாண்டு பலன்கள்- 2025. Show all posts

சிம்ம ராசி வருட பலன்கள் - 2025

சிம்ம ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü சிம்ம ராசிக்கு 2025 புத்தாண் பல வகையில் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். வணிகத்தில் முன்னேற்றமும், புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கும். அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் பெற முடியும்.

ü தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் தொடர்பாக வெளியூர், வெளிநாடு மூலம் வாய்ப்புகள் கிடைக்கும்.

ü வேலை, கல்வி, வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம். இறுமாப்பை இல்லாமல் அனுசரணையுடன் நடந்து கொண்டால் மேலும் வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும்.

ü சிம்மம் 2025 கணிப்புகளின்படி, ஆண்டின் முதல் பாதி தொழிலில் நல்ல அங்கீகாரம், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கொண்டு வரும்.

ü 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியானது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வீட்டுச் சூழலிலும் அதிக அமைதியையும் புரிதலையும் கொண்டு வரும்.

ü என்றாலும் இரண்டாம் பகுதி வாழ்க்கையில் சில கடினமான சவால்களைக் கொண்டு வரலாம்..

ü புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மற்றும் இருக்கும் வேலையில் பதவி உயர்வு , சம்பள உயர்கு மற்றும் போனஸ் போன்றவைகளும் கிடைக்கும்.

ü நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.

ü சனி பெயர்ச்சியின் காரணமாக சிம்ம ராசியபிறந்தவர்கள் இனி வரும் காலங்களில் பிரச்சனைக்குரிய பகுதிகளை எதிர் நோக்க வேண்டி வரும்.

ü 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தரப்போகிறது. வேலையில் சில சிக்கல் இருந்தாலும் பெரிய பிரச்சனையை இருக்காது.

ü மேலும் நிதி நிலையிலும் பிரச்சனை இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

ü சிம்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 8ஆம் இடத்திற்கு செல்கிறார். கண்டக சனி காட்டிலும் அஷ்டம சனி பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும் என்று சொல்லாம். வாழ்கையில் அடுத்த கட்டம் செல்வதற்கான அஸ்திவாரம் இந்த ஆண்டு இருக்கும் எனலாம்.



தொழில்



ü சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தோம் ஆனால் கலவையான முடிவுகளை இந்த வருடம் தரும் என்று சொல்லாம் . என்றாலும் இந்த ஆண்டு பல தொழில் வாய்ப்புகளையும் வெற்றிகளையும் தரும்.

ü 2025 ஆம்ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஏழாம் அதிபதியான சனி ஏழாம் வீட்டில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், சிரமங்களைச் சந்தித்த பிறகும் திறமையை வெளிப்படுத்துவதில் பல வாய்ப்புகளை கிடைத்து, மேலும் அதில் வெற்றியும் பெறுவார்கள். தொழிலில் பெயரும் புகழும் கிடைக்கும்.

ü மார்ச் மாதத்திற்கு பிறகு சனி எட்டாம் வீட்டிற்கு மாறுவார். எட்டாம் வீட்டில் சனி பெயர்ச்சிப்பது நல்லதல்ல. எனவே தொழிலில் சில ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். பணியிடத்தில் சில பிரச்சனைகள் வந்து தொந்தரவு செய்யலாம்.

ü இந்த காலத்தில் வணிகம் அல்லது எந்த வகையான முதலீட்டிலும் ரிஸ்க் எடுப்பது சரியாக இருக்காது. என்றாலும் நன்கு ஆராய்ந்து சில தைரியமான நடவடிக்கைகளை எடுக்கலாம், இது நீண்ட காலத்திற்கு பயனளிக்கும். என்றாலும் கவனம் அவசியம்.

ü அதே போல் புது கூட்டாளிகளை வியாபாரத்தில் சேர்க்கும் போது மிகவும் கவனம் அவசியம். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது கூடாது. இந்த ஆண்டு கூட்டு வணிகம் சாதகமாக இருக்காது.

ü மே மாதம் முதல் ராகுவின் பெயர்ச்சி ஏழாவது வீட்டையும் பாதிக்கத் தொடங்கும். வியாபார முடிவுகளில் அதிக விவேகம் தேவைப்படும்.

ü அதாவது, இந்த ஆண்டு வணிகத்தில் புதிய மற்றும் விலையுயர்ந்த சோதனைகள் எதையும் செய்வது நல்லது அல்ல.

ü சனி பகவானின் 3ஆம் பார்வை ராசிக்கு 10ஆம் இடத்தில் விழுகின்றது. இதனால் ஏற்கனவே வேலை இல்லாதவர்கள், தொழில் தொடங்கியும் சரியாக நடத்த முடியாதவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

ü தொழில் மற்றும் வேலையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். போதைய வருமானம் இல்லாமல் தவித்தவர்களுப்பு புதிய மாற்றம் உண்டாகும்.

ü லாப ஸ்தானத்திற்கு குரு செல்வதால் தொழிலில் லாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூல் ஆகும். கடன் எதிர்ப்பார்ப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும்.

ü பணத்தட்டுப்பாடு தீரும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்க முடியும். எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

ü சிம்மம் 2025 கணிப்புகளின்படி, ஆண்டின் முதல் பாதி சிம்மத்தின் தொழில் வாழ்க்கைக்கு அங்கீகாரம், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கொண்டு வரும்.

குடும்ப வாழ்க்கை



ü சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆண்டு பொதுவாக சராசரியாகவோ அல்லது காதல் உறவுகளுக்கு சராசரியை விட சிறந்ததாகவோ இருக்கும். மேலும் காதல் விஷயங்களில், மகிழ்ச்சியான மற்றும் சோகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.

ü மே மாதம் வரை 10ம் விட்டில் இருக்கும் குருவால் சராசரி காதல் வாழ்க்கை தான் இருக்கும்.மே மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு குரு லாப வீட்டை அடைந்து காதல் உறவுகளில் நல்ல இணக்கத்தைத் தருவார். புதுமணத் தம்பதிகளிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும்.

ü திருமண வயதை அடைந்தவர்கள் அல்லது திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தியை கொண்டு வரலாம்.

ü மே மாதம் முதல் ராகு கேதுவின் தாக்கம் ஏழாம் வீட்டில் தொடங்கும். எனவே திருமண வாழ்வில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரலாம். இருப்பினும், இவை அனைத்திலும் சாதகமான விஷயம் என்னவென்றால் மே மாதத்திற்கு பிறகு 11ம் விட்டிற்கு வரும் குரு 7ம் விட்டை பார்ப்பதால் எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக முடியும்.

ü குரு பெயர்ச்சியால் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வீட்டுச் சூழலிலும் அதிக அமைதியையும் புரிதலையும் கொண்டு வரும்.

ü மே மாதத்தில், காதலர்கள் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும், எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ü மே மாதம் முதல் ராகு கேதுவின் தாக்கம் ஏழாம் வீட்டில் தொடங்கும். எனவே திருமண வாழ்வில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரலாம். இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபரை அனுமதிக்க வேண்டாம்.

ü மேலும் குரு ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் எல்லா பிரச்சனைகளையும் குரு திர்த்து வைப்பார்.

ü மார்ச் மாதம் முதல் சனியின் தாக்கம் இரண்டாம் வீட்டில் இருக்கும். குடும்ப உறவுகளின் விஷயங்களில் எந்தவிதமான கவனக்குறைவும் இந்த ஆண்டு இருக்க கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். என்றாலும் இந்த ஆண்டு இந்த விஷயத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

ü இந்த ஆண்டு நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்து உறவில் புதிய படிகளை எடுக்க முடிவு செய்யலாம்.

ü இந்த ஆண்டு காதல் கனவு துணைக்காக காத்திருப்போருக்கு ஆண்டின் ஆரம்பம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். மேலும் , காதல் செய்யும் நபரிடம் சொல்ல தங்களது காதலை, சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு ஆரம்ப மிக சிறந்தாக இருக்கும்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிதி விஷயங்களில் கலவையான பலன்களைத் தரக்கூடும். என்றாலும் பொதுவாக நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü வருமானத்தின் பார்வையில் இந்த ஆண்டு பொதுவாக நன்றாக இருக்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் பணவரவில் அதாவது நிதி நிலையில் முன்னேற்றம் காணலாம் மேலும் சேமித்த பணத்தை பாதுகாப்பாக வைக்கவும் முடியும். பலருக்கு வங்கியில் இருப்பு நன்றாகவே இருக்கும்.

ü ஆண்டின் தொடக்கத்தில் ஷேர் மார்க்கெட் துறையுடன் தொடர்புடையவர்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

ü சிம்ம ராசியின் எட்டாம் வீட்டில் சனி வரும் பொது நிதி வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படலாம் . பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருந்தால் நல்லது. மேலும் திடீரென்று செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

ü ராகு, கேது மற்றும் சனி முன்று கிரகங்களின் பெயர்ச்சி இந்த ஆண்டு இரண்டாம் பகுதியில் நிதி அம்சத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கும். என்றாலும் குரு பார்வை காப்பற்றும் என்று தான் சொல்ல வேண்டும், எனவே சிம்ம ராசிக்காரர்களின் செயல்களுக்கு ஏற்ப நிதி நன்மைகளைப் பெற முடியும்.கர்வம் மற்றும் இருமாப்பு விடுத்து அனுசரித்து நடக்க வேண்டும் .

ü 11ம் வீட்டிற்கு வரும் குருவால் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூல் ஆகும். வேலையில் சிக்கல் இருந்தாலும் நிதி நிலையில் பிரச்சனை இருக்காது.

கல்வி - படிப்பு



ü சிம்ம ராசிக்காரர்களுக்கு, 2025 ஆம் ஆண்டு கல்விக் கண்ணோட்டத்தில் பொதுவாக சாதகமான பலன்களைத் தரும் என்று தான் சொல்ல வேண்டும்.

ü ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருந்தால், கல்வி தொடர்பான வீடுகள் மற்றும் கிரகங்கள் இந்த ஆண்டு நன்றாக இருப்பதால் கல்வி நிலை வலுவாக இருக்கும் என்று சொல்லாம். என்றாலும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கட்டாயம் கட்ட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும். படிப்பிலும் ஆர்வம் காட்ட முடியும் என்பதை மனத்தில் வைத்து கொள்ளவும்

ü ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை குரு பார்வை நான்காம் வீட்டில் இருப்பாதால் கல்வி குறிப்பாக உயர்கல்வி விஷயங்களில் நன்றாக இருக்கும். மேலும் போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளைத் தரும்., வெற்றியும் கிடைக்கும்.

ü மேலும் ஆண்டின் இராண்டாம் பகுதியிலும் குரு 11 ம் வீட்டில் இருந்து கல்வி நிலை சிறப்பாகச் செயல்பட உதவுவார்.

ü இந்த வருடத்தில் புதனும் பெரும்பாலான நேரங்களில் சாதகமான பலன்களை வழங்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்த துணை நிற்பார்.

ü உயர்கல்வி பற்றிய தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் புதிய மாற்றங்களைத் தரும். கலைத் துறைகளில் தனிப்பட்ட ஈர்ப்புகள் உருவாகும்.

ü வெளிநாடு செல்லும் கல்லூரி மாணவர்கள் நிதி உதவி கிடைக்கும்.

ü ஆராய்ச்சி கல்விகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்பட்டால் தங்கள் படிப்பை முடித்தவுடன் பேராசிரியர்களாக வாய்ப்பு கிடைக்கும்.

ü விளையாட்டு போட்டிகளில் விருப்பம் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு, போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பும், வெற்றியும் கிடைக்கும்.

ஆரோக்கியம்



ü ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறு பிரச்சனைகள் வரலாம் என்றாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம்.

ü உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனைகள் பெறுவது முக்கியம். பார்வை சம்பந்தமான சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ü சிம்ம ராசிகாரர்கள் இந்த ஆண்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க புதிய வழிகளை முயற்சி செய்வார்கள். அதில் திருப்தியும் இருக்கும்.

ü என்றாலும் மார்ச் மாதத்திற்கு பிறகு உடல்நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.

ü வயதில் முத்த சிம்ம ராசிகாரர்களுக்கு எலும்புகள், தோல் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்

ü ஆண்டின் இரண்டாம் பகுதி, சனி பெயர்ச்சியால் ஆரோக்கிய சற்று பலவீனமாக மாறலாம். என்றாலும் குருவின் பார்வை அனுகூலமாக இருக்கும்.

ü பெண்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மருத்துவ பரிசோதனை தேவைப்படலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்களை உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

ü வயதான சிம்ம ராசி ஆண்களுக்கு மூட்டு மற்றும் கால் வலி வர வாய்ப்பு உள்ளது.


பரிகாரங்கள்



ü ஞாயிற்று கிழமைகளில் சிவன் பூஜை செய்வது தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

üதினமும் சிம்ம ராசிக்காரர்கள் கண்டிப்பாக சூரிய பகவானை வழிபட வேண்டும். முடிந்தால் ஆதித்ய ஹிருதயத்தை பாராயணம் செய்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

ü வயது முதிர்ந்தவர்களுக்கு ஆடை தானம் செய்வதினால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

üசனிக்கிழமைகளில் ஐயப்ப சுவாமியை வழிபட எண்ணத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும்.

üபிரதோஷ நாள் அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானமாக கொடுப்பதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ü முடிந்தவர்கள் நாள்தோறும் நெற்றியில் குங்குமம் வைத்து கொள்வது நல்லது.

ü புதிதாக வீடு கட்ட அல்லது , வண்டி, வாகனம் வாங்க விரும்பும் சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடலாம்.