Showing posts with label கும்ப ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts
Showing posts with label கும்ப ராசியில் பிறந்தவர்களின் 2025 ஆண்டு பலன்கள். Show all posts

கும்ப ராசி வருட பலன்கள் - 2025

கும்ப ராசியில் பிறந்தவரா? உங்களுக்கானது!!!


பொது பலன்கள்

தொழில்

குடும்ப வாழ்க்கை

நிதி நிலை - பொருளாதாரம்

கல்வி - படிப்பு

ஆரோக்கியம்

பரிகாரங்கள்


 

பொது பலன்கள்



ü இந்த ஆண்டை பொறுத்தவரை, கும்ப ராசிகாரர்களுக்கு கலவையான பலன்களே இருக்கும் எனலாம்.

ü ஆண்டின் ஆரம்பத்தில் ஜென்ம சனியால் அழுத்தமும் பதட்டமும் அதிகரிக்கும், ஆனால் குரு பகவான் இவர்களின் முயற்சிகளுக்கு வெகுமதி அளிக்கும்.

ü மார்ச் 29, 2025 முதல் சனி பகவான் உங்கள் 2வது வீட்டிற்கு மாறுகிறார். இது ஜென்ம சனி முடிந்து ஏழரை சனியின் கடைசி கட்டத்தை ஆரம்பிக்கும். ஜென்ம ராசியை விட உங்கள் 2 ஆம் வீட்டில் சனியின் மோசமான விளைவுகள் குறைவாக இருக்கும்.

ü மேலும் குரு பெயர்ச்சி பிறகு குரு பார்வை இருப்பதால் தைரியம் அதிகரிக்கும்.

ü இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் 3ஆம் பார்வையாக 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளின் மூலம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ü 7ஆம் பார்வையாக 8ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தேவை இல்லாத உடல் உபாதைகள், சிறு விபத்துக்கள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. இந்த ஆண்டை பொறுத்தவரை, கும்ப ராசிகாரர்களுக்குஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் உறவு நன்றாக இருக்கும். என்றாலும் திருமண உறவில் அடிக்கடி பிரச்சனை வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவத்தையும் குரு தருவார்.

ü தனிப்பட்ட மற்றும் தொழிலும் சில கசப்பான உண்மைகளை தெரிந்து கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். இருப்பினும், இந்த தடைகள் மாறிவரும் சூழ்நிலை மாற்றுவதற்கும் மாற்றியமைப்பதற்கும் குரு உதவுவார்.

ü இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் சில சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், இந்த சவால்கள் தனிப்பட்ட வளர்ச்சி, கற்றல் மற்றும் உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும்.

ü கடின உழைப்பின் காரணமாக முடிவு எடுக்கும் திறன் மேம்படும். மேலும் முக்கியமான சமுக சூழ்நிலை களை சந்திக்க வேண்டி இருக்கும்.

ü பொதுவாக இந்த ஆண்டு கும்ப ராசிக்கு வாய்ப்புகள் மற்றும் சவால்கள் நிறைந்த பயணமாக வருடமாக இருக்கும்.



தொழில்



ü கும்ப ராசிக்காரர்களுக்கு, வணிகம் மற்றும் உத்தியோக கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த ஆண்டு சராசரியை விட சிறந்த பலனை அளிக்கும் என்று சொல்லாம்.

ü ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாதம் வரை பத்தாம் வீட்டில் சனியின் பார்வையால் வியாபாரம் ஓரளவு மந்தமாக இருந்தாலும் பின்னர் வியாபாரம் வேகமெடுக்கும்.

ü வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் நிறைவேறும். சில புதிய நுட்பமான விசயங்களை தெரிந்துகொள்ளும் தருணங்கள் உண்டாகும். வேலையாட்களின் குணம் அறிந்து செயல்படவும். கட்டுமான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். செயல்பாடுகளில் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.

ü பொதுவாக வியாபாரம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்று சொன்னாலும் கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே மிகுந்த எச்சிரிக்கை தேவை.

ü வேலைக்கு செல்லும் கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு நிலையான தொழில் இருக்கும் என்று சொல்லாம். ஆண்டின் முதல் பாதி சவாலானதாக இருக்கும், ஆனால் இரண்டாவது பாதி வேலை நிலை தன்மை மேம்படும் மேலும் வளர்ச்சியும் உண்டாகும்.

ü உத்தியோகஸ்தர்களுக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. . சிலருக்கு வேலை நிமித்தம் காரணமாக வீடு மாற்றம் செய்யும் சூழல்நிலை உண்டாகலாம். இது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.

ü பாத சனி நடைபெறுவதால் உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோம்பலை விடுத்து, வேலைகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ü தொழில், வியாபாரம் செய்பவர்கள், முதலீடு விசயத்தில் ஏமாற்ற படலாம். என்பதால் துறை வல்லுநர்கள் அல்லது அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.

ü ஊழியர்கள் அல்லது சக ஊழியர்கள் இவர்களுக்கு எதிராக சதி செய்யலாம் இதனால் பணி செய்யும் இடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தத்தை இது உண்டாக்கும்

ü என்றாலும் குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும்

ü இந்த ஆண்டை பொறுத்தவரை இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்

குடும்ப வாழ்க்கை



ü இந்த ஆண்டை பொறுத்தவரை, கும்ப ராசிகாரர்களுக்கு ஜென்ம சனி விலகுகிறது என்பது ஒரு பெரிய நிம்மதி என்று சொல்லாம்.

ü சனி பெயர்ச்சிக்கு பிறகு 2ஆம் வீட்டில் சனியும், 4ஆம் வீட்டில் குருவும், 2ஆம் வீட்டில் ராகுவும், 8ஆம் வீட்டில் கேதுவும் இருப்பது நல்ல சேர்க்கை அல்ல. குடும்ப உறுப்பினர் இடையே மோதல் வரும். மற்றும் அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தலாம். சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதில் தாமதங்களும் தடைகளும் இருக்கும்.

ü குரு பகவான், ராகு, கேது பெயர்ச்சிக்குப் பிறகு, ஜூன் 2025 முதல் உங்களின் நேரம் நன்றாக இருக்கிறது. குடும்பப் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீரும்.

ü கும்ப ராசிக்காரர்களின் வீட்டில் விசேஷம் வரலாம். அதாவது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள், சிறப்பாக செய்ய முடியும். சுப காரிய செயல்பாடுகளை நடத்த இது ஒரு சிறந்த நேரம்.

ü திருமணம் செய்ய விரும்பும் கும்ப ராசிகாரர்களுக்கு 2 ஆம் வீட்டில் சனி பகவான் உங்கள் திறமை மற்றும் தகுதிக்கு கீழே ஒரு கூட்டாளரை தேர்வு செய்ய வழிவகுக்கும்.ஆனால் குரு 5ம் வீட்டுக்கு வந்த பிறகு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவார்.

ü திருமணமான தம்பதிகள் திருமண மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள், மேலும் சந்ததி வாய்ப்புகள் நன்றாக இருக்கும். குழந்தை பிறப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் வெளியில் செல்வது என்று மகிழ்ச்சி இருக்கும்.

ü கும்ப ராசி பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டை புதுப்பிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் தொடர்பான துறைகளில் நிதானமான முடிவுகள் எடுப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

ü இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை இரண்டாவது வீட்டில் ராகு, கேதுவின் தாக்கத்தால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

ü 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குரு கிரகம் நான்காவது வீட்டில் அமைந்திருக்கும் சமயம் கும்ப ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.

ü ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகும் அவை 1 மற்றும் 7 வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சியை குறைக்கும். திருமண உறவில் அடிக்கடி பிரச்சனை வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவத்தை குரு கொடுப்பார்.



நிதி நிலை - பொருளாதாரம்



ü கும்பம் ராசிக்காரர்களுக்கு நிதி வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும்.

ü மே 2025 வரை, கும்ப ராசினாருக்கு நிதி நிலைமை சவாலாக இருக்கலாம். எதிர்பாராத பயணம், கல்வி, மருத்துவம் மற்றும் பிற அவசரநிலைகளால் செலவுகள் உயரக்கூடும்.

ü பணத்தை யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது இப்போது கடன் வாங்குவதையோ தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் யாருடைய வங்கிக் கடன் ஒப்புதலுக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

ü வரவுகள் இருந்தாலும் அதிக செலவுகள் அதிகரிக்கும் மே 2025க்குப் பிறகு குரு உங்கள் ஐந்தாவது வீட்டில் நுழையும் போது ​​நிதியில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

ü நிழல் கிரகமான ராகு, கேதுவின் பெயர்ச்சி நிதி நிலை பொறுத்து நல்லது இல்லை.இது நிதி இழப்பைக் குறிக்கிறது.

ü சொத்து தொடர்பான வில்லங்கம் மற்றும் வழக்குகள் முடிவுக்கு வரலாம். வங்கி கடன் கிடைக்கும்

ü இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ü குரு 5ம் வீட்டிற்கு வந்த பிறகு நிதி வகையில் உள்ள சிக்கலை தீர்ப்பார். செலவுகள் அதிகரித்தாலும் வருமானத்தை அதிகரிக்க உதவுவார்.

ü கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விஷயங்களில் சிறப்பாக இருக்காது.

ü பட்ஜெட்டை விட அதிக செலவு செய்து வாகனம் வாங்க இது சரியான நேரம் இல்லை. பிரச்சனையில் மாட்டி கொள்ளலாம். கவனம் அவசியம்.

ü அரசியலில் இருப்பவர்கள் ஆதாயகரமான பணிகளில் ஈடுபட்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ü பொதுவாக இந்த ஆண்டு நிதி மற்றும் முதலீடுகள் நிலையானதாக இருக்கும். செல்வச் சேர்க்கை அதிகமாக இருக்காது, ஆனால் பண நெருக்கடியும் இருக்காது.

கல்வி - படிப்பு



ü கும்ப ராசிக்காரர்களுக்கு, கல்விக் கண்ணோட்டத்தில் 2025 ஆம் ஆண்டு என்று பார்க்கும் போது, சராசரியாக தான் இருக்கும்.

ü முதல் நான்கு மாதங்கள் கல்வியில் சவால்கள் நிறைந்து இருக்கும். மேலும் நண்பர்களுடன் மோதலால் படிப்பில் ஆர்வம் குறையும். கெட்ட பழக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ü மே மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்குகல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.

ü மேலும் விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

ü என்றாலும் 7ஆம் பார்வையாக 8ஆம் இடத்தை சனி பார்ப்பதால் வாகனங்களை ஓட்டும் போது அதிக வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளை அப்படியே நம்பாமல் தீர ஆலோசித்து செயல்படவும்.

ü போட்டி தேர்வுகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. விரும்பிய நல்ல பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர வாய்ப்பு உண்டாகும்.

ü மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் ஆண்டின் கடைசி மாதங்களில் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

ü குறிப்பாக கலை மற்றும் இலக்கியத்துடன் தொடர்புடைய மாணவர்கள் இன்னும் சிறந்த பலன்களைப் பெற முடியும். மேலும் ஆராய்ச்சி மாணவர்களும் நல்ல முடிவுகளை அடைய முடியும்.

ü பிறந்த இடத்தை விட்டு வெளியில் படிக்கும் அல்லது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களும் நல்ல பலன்களைப் பெறலாம்.

ü கல்வியை பொறுத்த வரை ஏப்ரலுக்கு பிறகு சற்று சாதகமாக தான் இருக்கும் என்று இருக்கும் என்று சொல்லாம்.

ஆரோக்கியம்



ü கும்ப ராசியினருக்கு, ஆரோக்கியம் இந்த ஆண்டு சராசரியை விட சற்று பலவீனமாக இருக்கலாம்.

ü முதல் 5 மாதங்கள் ஆரோக்கியத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும். மேலும் வாழ்க்கை துணை மற்றும் பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் சிக்க இருக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ü ராகு வயிறு அல்லது மனம் தொடர்பான சில பிரச்சனைகளை தரலாம். ராகு மற்றும் சனி இவர்களின் உடல்நிலை மோசமடையா செய்யும் ஏறனு தான் சொல்ல வேண்டும்

ü சனி பெயர்ச்ச்சிக்கு பிறகு மன அழுத்தம் மற்றும் பதற்றம் சற்று குறையும் எனலாம் . என்றாலும் உடல் ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல ஆரோக்கியம் நிலவும் என்றாலும் குரு ராசியை பார்ப்பதால் உடல்நலக் குறைபாடுகள் சற்று குறையும்.

ü ஆண்டின் இரண்டாம் பாதியில், கும்ப ராசிக்காரர்களின் மன ஆரோக்கியத்தில் கூட கவனம் தேவை. மேலும் பல்வலி, கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம்.

ü குரு பெயர்ச்சிக்கு பிறகு தூக்கமின்மை பிரச்சினையினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த கும்ப ராசியினர்க்கு சீரான தூக்கம் வரும்.

ü கும்ப ராசிகாரர்களுக்கு ஆரோக்கியம் இந்த ஆண்டு பலவீனமாக இருந்தாலும் உடல்நலம் தொடர்பான கடுமையான பிரச்சனைகள் எதுவும் வராது. ஆரோக்கியத்தை பொறுத்துவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.


பரிகாரங்கள்



ü சனிக்கிழமை மற்றும் அமாவாசை அன்று அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அருகில் உள்ள சனிஸ்வர் சன்னதிக்கு சென்று விளக்கு ஏற்றி வரலாம்.

ü முடிந்தவர்கள் காளஹஸ்தி அல்லது ஏதாவது ராகு சன்னதிக்கு சென்று வரலாம்.

ü கவலைகள் மறைய நரசிம்மரை வழிபடுவது மிகவும் நல்லது.

ü முடிந்தவர்கள் வெள்ளியால் ஆன ஆபரணத்தை அணியலாம். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ü முடிந்தளவு ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்யலாம்.

ü கருப்பு நிற உடைகளை அணிவதை தவிர்க்கலாம். மேலும் சனி கிழமை அன்று கருப்பு நிற பொருட்களை தானம் செய்வதையும் தவிர்க்கலாம்.

ü செவ்வாய்கிழமை கேதுவையும் சனிகிழமை சனியை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

ü முடிந்தவர்கள் அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்யலாம்.