Showing posts with label உடல் எண். Show all posts
Showing posts with label உடல் எண். Show all posts

What is Numerology?




ஜோதிடம் கலை (Tamil Astrology) 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது மற்றும் பராசரர், வராகமிகிரர், ஜெய்மினி போன்ற மாமுனிவர்களால் வளர்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக எண் கணிதம் பிரபலமாகி வருகிறது. எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு அம்சம் எனலாம். ஒவ்வொரு எண்ணுக்கும் குறிப்பிட்ட ஆற்றல்கள் உள்ளன.எ.கா. தலைமைத்துவம், புதுமை மற்றும் சுதந்திரம் ஆகியவை நம்பர் 1க்கு உரித்தானது.

பூஜ்ஜியத்திற்குப் பின்னர் 1, 2, 3, 4 என்று எண்ணிக் கொண்டே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போய்க்கொண்டே இருக்கலாம். 

எண்கணிதம் என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கையும் கடந்து வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களை வைத்து ஒரு மனிதனின் தன்மை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கணிப்பது போல, எண் கணித சாஸ்திரத்திலும் ஒரு மனிதனின் தன்மை, மேன்மை, வளர்ச்சி, எதிர்காலம் என அனைத்தையும் கணித்துக் கூற இயலும் என்பதை பல அறிஞர்கள் ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். 

எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை தான் உள்ளது. அதற்கு பின் வரும் என் 10 என்றால் 1 + 0 =1 ஆகும். 15 என்றால் 1 + 5 = 6 ஆகும் 

எண் கணிதத்தில் ஒவ்வொரு மனிதனையும் மூன்று எண்களைக் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிக்கலாம்.

          • உடல் எண்
          • உயிர் எண்
          • பெயர் எண் கணக்கீடு

 மூன்று எண்களையும் எவ்வாறு கணிக்கலாம் என்றால் ஒருவர் பிறந்த தேதி 22-09-1996 என்று வைத்து கொண்டால் 

      • உடல் எண் - 2  + 2 = 4
      • உயிர் எண் - 2 + 2 + 0 + 9 +1 + 9 + 9 + 6 = 38

                                          => 3  + 8 = 11 => 1 + 1 = 2

தேதியை கூட்டினால் வருவது உடல் எண். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவை கூட்டினால் வருது உயிர்  எண். 

ஆங்கில எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உண்டு. அந்த எண்ணை கூட்டினால் வருவது தான் பெயர்  எண் ஆகும்


ஓருவருடைய பெயர் S.Rajan என்றால் அவருடைய பெயர் எண் :

3 + 2 +1 + 1 + 1  + 5= >13 => 1 + 3 = 4

எண்கணிதத்தின் படி இவருக்கு பலன்களை கூறும்போது முதலில் உயிர் எண் 9 ஐக் கொண்டு இவருடைய குண நலன்களைக் கூறலாம். ஒருவரின் குண நலன்களைக் கொண்டு அவர் வாழ்க்கையில் அடைய்ப் போகும் நன்மை, தீமைகளை கணித்துக் கூற இயலும்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று, “ஒரு எண்ணைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்களை எப்படி கூறுவது?”, எதன் அடிப்படையில் கணிப்பது? என்ற கேள்வி எழுகின்றது.

ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்கின்றது என்பதை எண்கணித ஆய்வாளர்கள் அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.

எண்களும் கிரகங்களும்:


உடல் எண்

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது

பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்து  கொள்ள முடியும் . மேலும் அதை மாற்றி கொள்ள இயலும்.

உயிர்  எண்

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற  கூட்டு எண் தான்  உயிர் எண் என்று  ஆகும் 

கூட்டு எண் மூலம் எதிர்காலம், தொழில் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள இயலும்

பெயர்  எண்

பெயர் எண் ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

மேலும்  உடல் மற்றும் உயிர் எண்ணிற்கு ஏற்றப்படி அதாவது நட்பு எண் உடைய  பெயரை வைத்துக் கொள்வதன் மூலம் நம்மால் அதிர்ஷ்டத்தை உருவாக்க இயலும்.

நாம் வைக்கக்கூடிய பெயரின் எண்ணிற்குரிய கிரகமானது ஜாதகத்தில்  வலுபெற்று இருந்தால் சிறப்பான வாழ்க்கையை அமைத்து கொள்ள இது உதவும் 

ஒருவர் எண்கணித முறைப்படி அவரின் பெயரை மாற்றி அமைக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் என்று எண் கணிதத்தில் நம்பப்படுகிறது. 

தொடரும் .....