ஜோதிடம் பாடம் -6 பக்கம் -4





மகரம் லக்கினம்:
அதிபதி சனி
யோககாரகர்கள் சுக்கிரன், புதன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள் சந்திரன், குரு
மாரக அதிபதி சந்திரன், குரு
நோய் சுரம், விஷம் , ஜலம் இவைகளால் பீடை
ஆயுள் சுபர் பார்க்க 67 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

துர் ஆசை உடையவர், திடபுத்திமான், கோபக்காரன், மனைவியிடத்தில் பிரியமுள்ளவன்



கும்பம்லக்கினம்::
அதிபதி சனி
யோககாரகர்கள் சுக்கிரன், புதன், சனி
யோகமில்லாதவர்கள் சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி சந்திரன், செவ்வாய்
நோய் ஜுரம், பித்த சரீரம் , மிகுந்த சன்னி, வாதசுரம், பித்தசுரம்
ஆயுள் சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்



மீனம் லக்கினம்:
அதிபதி குரு
யோககாரகர்கள் சந்திரன், செவ்வாய்
யோகமில்லாதவர்கள் சுக்கிரன், சூரியன், புதன், சனி
மாரக அதிபதி சூரியன்
நோய் உஷ்ண ரோக பிரச்சனை , ஜுரம், இருமல்
ஆயுள் சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

ஞ்ானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன் , இரக்கமுடையவன் , குளிர்ச்சியான கண்கள் உடையவன்

முன்புறம்,     1,     2,      3,     ,4