ஜோதிடம் பாடம் -6 பக்கம் -3





துலாம் லக்கினம்:
அதிபதி சுக்கிரன்
யோககாரகர்கள் சனி, புதன்
யோகமில்லாதவர்கள் சூரியன், செவ்வாய், குரு
மாரக அதிபதி செவ்வாய்
நோய் மனோபீதி , பேதி
ஆயுள் சுபர் பார்க்க 85 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

நல்ல குணம், புத்தி, அறிவு, பொறுமை, புகழ் உடையவர், தனவான் , இரக்கம் உடையவர்,ஜனப்பிரியர் , சுகவான்



விருச்சிகம் லக்கினம்:
அதிபதி செவ்வாய்
யோககாரகர்கள் சூரியன் ,குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன்
மாரக அதிபதி புதன், சுக்கிரன்
நோய் ஜுரம், ஜன்னி
ஆயுள் சுபர் பார்க்க 90 வயது வரை இருப்பர்

( குருவும், சனியும் கொல்லான் . சில நூல்கள் சூரியன் , சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் சொல்கிறது )

பொது பலன்கள் :

புத்திமான் , வஞ்சகன் , தனவான் , எடுத்திட காரியத்தை முடிப்பவன் , மனைவி மீது பிரியமுள்ளவன் , வரையற்ற விஷப்பிரியன், முன்கோபமுடையவன்

தனுசு லக்கினம்:
அதிபதி குரு
யோககாரகர்கள் புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவர்கள் சுக்கிரன்
மாரக அதிபதி சனி
நோய் உஷ்ண ரோக பிரச்சனை , கண் நோய்
ஆயுள் சுபர் பார்க்க 77 வயது வரை இருப்பர்

பொது பலன்கள் :

சத்தியவான், நல்ல குணமுடையவன், நன்றாக பேசுபவன் , தனவான் , பழகுவதற்கு இனியவன் , வித்தையுடையவன்

முன்புறம்,     1,     2,      3,     4,      தொடர்ச்சி