ஜோதிடம் பாடம் -2 பக்கம் -2




தசாபுத்தியை பற்றி இந்த படத்தில் பார்ப்போம் .

நமது இந்து (Hindu) மதம் மறு பிறவியை (Rebirth) வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் (body)அழிவே தவிர ஆன்மாவிற்கு (Soul)இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம் (Hindu Dharama). இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நாம் அனுபவிக்கும் நல்லது, கெட்டதை தான் ஊழ்வினை என்பர்.

ஒரு ஜாதகர் பிறக்கும் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசை தான் அந்த ஜாதகரின் ஆரம்ப தசை ஆகும் பிறகு தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்களில் அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் . ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்


போன பிறவியில் (Before this birth) ஒருவர் சூரிய திசையில் இறந்தால் மறுபிறவில் அதே திசையில் பிறந்து இந்த பிறவியின் பிரயாணத்தைத் தொடருவார் என்பது ஒரு ஆதிகம் . எனவே திச-புத்தி மிக முக்கியம் ஆகும்.அதே போன்று போனஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கு இப்பிறவியில் நல்ல பிறப்பு , நற்பயன்கள் எற்படும் . போன ஜென்மத்தில் ந்ல்லது செய்தோமா இல்லையா என்பதை ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம்.
பிறப்பு இருப்பு திசை என்று உங்கள் ஜாதகத்தில் குறித்து இருப்பார்கள்

முன்புறம்,      1,      2