ஜோதிடம் கலை (Tamil Astrology) போல் எண் ஜோதிடமும் மிகவும் பழமை வாய்ந்தே.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்"
என்பது தமிழ் மொழி.
எண் கணிதம் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியில் ஆரம்ப
காலத்தில் இருந்தே எண் கணித முறை காணப்படுகிறது. இதனை கடபயாதி ஸம்க்ஞை என்பர்.
எண்களுக்கும் கோள்களுக்கும் சம்பந்தம் உள்ளது. 18 ஆம்
நூற்றாண்டின் இறுதியில் “கீரோ” என்னும் மேல் நாட்டறிஞர் எண்களுக்குரிய கோள்களை
அமைத்தார். இதற்கு நியூமராலாஜி என்று பெயரிட்டார்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழுமுயிர்க்கு"
இது
குறள் நெறி கூறும் அறிவுரை.
எண்ணும்
எழுத்தும் மனித வாழ்க்கையின் நிலைகளைப் பிரதிபலித்துக் காண்பிக்க உதவுகின்றன. அல்லது மனித வாழ்க்கைத் தொடர்பான தொலைவிலுள்ள ஏதோ
ஓர் அம்சத்தை நெருக்கத்தில் காண்பிக்க உதவுகின்றன.
மனித
வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் ஏதோ ஒரு வகையில ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது
மேற்சொன்ன முன்னோர்களின் வாக்கு மூலம் நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம்
தோன்றும் போதே தோன்றியிருக்கும். அதை மனிதன்
அறிந்து கொண்டது தாமதமாகத்தான் என்றாலும், எண்கள் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும். எவ்வாறெனில் ஒரே ஒரு நெருப்புக் கோளத்திலிருந்து
இவ்வுலகம் தோன்றியிருக்கிறது என அறிந்துள்ளோம்.
எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கிறது..
மேலும்
எண் கணித ஜோதிடத்தை, நமது நாட்டில் தற்போது பலரும் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக எண் கணிதத்தின் நிபுணராகக்
கருதப்படும் பண்டிட் சேதுராமன் அவர்கள் இந்த முறையையே சிறந்த முறையாகக் கொண்டு எண்
கணிதத்தைப் பற்றி நூலை எழுதியுள்ளார். பெயர் எண், விதி எண், உயிர் எண் என மூன்று எண்களைக் கொண்டு நியூமரலாஜி பலன்களைக்
காண இயலும்.
சில
வரலாற்று குறிப்பில் எண் சோதிடம் பல கிரேக்க அறிஞர்களால் ஆராய்ந்து எழுதபட்டது என்று
சொல்லப்படுகிறது. அதற்கு ஆதராமாக புத்தகமும் இருக்கிறது
எண்
ஜோதிடம், தமிழ் ஜோதிடத்தில்
ஒரு அங்கமாக இல்லையெனிலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி
ஆலோசனை வழங்குகிறார்கள்.
பண்டைக்காலத்தில்
வாழ்ந்த கிரேக்க நாட்டுக் கணித மேதையான பிதாகரஸ் என்பவரையும் அண்மைக்காலம் வரை வாழ்ந்து
மறைந்த ஜுரோ என்பவராலும் தான் இந்த எண் கணித சாஸ்திரமானது உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது..
எண் கணிதம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின்
வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த
எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர்.
அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். இது ஆங்கிலத்தில் ‘Numerology’ என அழைக்கபடுகிறது.
எண் ஜோதிடம்
(Numerology)
என்பது எண்களுக்கும் வாழ்வின்
நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக்
கணிக்கும் ஜோதிடம் ஆகும்.
எண் கணிதம் 3 வகையில் கணித்து சொல்லப்படுகிறது
v
பிறந்த தேதி எண்
v
கூட்டு எண்
v பெயர் எண்
இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு
எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில்
வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.
பிறந்த தேதி எண்
ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது
பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது.
அதாவது எண் கணித சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு ஜாதகரின்
பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு அவர் பிறந்த ஆங்கில தேதி முக்கிய அங்கம் வகிக்கிறது.
மேற்கண்ட அட்டவணைப்படி கிரகங்களுக்கான எண்கள் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் மேற்கூறப்பட்ட எண்களுக்கு நட்பு, பகை எண்களை அறிந்துகொள்வோம்.
எண் |
ஆட்சிக்கிரகம் |
நட்புஎண் |
பகை
எண் |
1 2 3 4 5 6 7 8 9 |
சூரியன் சந்திரன் குரு இராகு புதன் சுக்கிரன் கேது சனி செவ்வாய் |
4 7 9 1 9 9 2 5 5, 6 |
8 8 6 8 6 3, 5 8 8 2 |
ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும், சந்திரனுக்குக் கேதுவும்
பகை என்று சொல்வார்கள். எண் கணிதத்தில் நட்பு எனக் குறிப்பிட்டுள்ளோம். சூரிய சந்திரர்களின் நிழலே இராகு, கேதுக்களாகும். எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக
வருகிறார்கள்.
கூட்டு எண்
ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும்
கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது.
அதாவது ஒரு ஜாதகரின் எண் என்ன என அறிய அவர் பிறந்த ஆங்கிலத்
தேதியில் தேதி,
மாதம், வருடம் ஆகியவற்றின் மொத்த
கூட்டுத் தொகையே அந்த ஜாதகரின் கூட்டு எண்ணாகும்.
ஒருவர் 20-12-1967 அன்று பிறந்தார் என்றால் அவர் பிறந்த எண் 2 + 0 = 2 .
2+0+1+2+1+9+6+7 =>28 => 2+8 => 10 => 1+0=1
அவருடைய கூட்டு எண்
1 ஆகும்
அதாவது அவர் உடல் எண் 2 கூட்டு எண் 1 ஆகும். தனித்தனியாகவும், இரண்டும் சேர்த்தும் பலன் சொல்லாம்.
பெயர் எண்
ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண்
அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. ஆனால் எண்
9 மட்டும் ஆங்கில எழுத்துக்கள் இல்லை
பிரமிடு மூலம் பெயரெண் காணல்
ஒரு ஜாதகரின் பெயருக்கான ஆங்கில எழுத்துக்களின் எண்களைக்
கொண்டு பெயரெண் அமைக்கும்போது, அந்த எண்களில் இரண்டு, இரண்டு எண்களாகக்கூட்டி பிரமிடு மாதிரி அமைக்க வேண்டும். இது ஒருவகையில் மிக
துல்லியமாக பெயர் வைக்க உதவும்.
மேற்கூறிய ஜாதகியின்
விதியெண் எட்டு, எட்டாம் எண்ணில் பெயர் வைப்பது சிறப்பில்லை என்பதற்காக எட்டாம் எண்ணின் நட்பு
எண்ணான ஐந்தாம் எண்ணில் பெயர் அமைத்தோம். ஐந்தாம்
எண்ணில் பெயர் அமைத்தால் எட்டாம் எண்ணில் பிறந்த பலனை மாற்றிக்கொள்ளமுடியும். அதற்குப்பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக
வரும் எண்ணும் ஐந்தாக வருவதால் நிச்சயம் எட்டாம்
எண்ணில் பிறந்த பலனை மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் ஐந்தாம் எண்ணின் அதிபதியான புதன் ஜாதகத்தில் வலிமையுடையவராக இருந்து, அந்த ஜாதிக்கு இலக்ன சுபராகவும் இருந்தால் மிகமிக உன்னதமான பலனைத் தரும்.
மேலும் ஒரு ஜாதகருக்கு
அவரின் நட்சத்திரத்திற்கான நாம் எழுத்துக்களின் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் சிறப்பாகும்.
ஒரு ஜாதகருக்குப்பிறந்த
தேதியின் எண்ணும் விதியெண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு. அல்லது ஒன்றுக்கொன்று நட்பாக அமைவதும் சிறப்பு. மேலும் அந்த ஜாதகருக்குப் பெயரெண்ணும் அதே எண்ணாகவோ
அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.
அதற்குப் பிரமிடு அமைக்கும் பொழுது பிரமிடின் முடிவாக வரும் எண்ணும் அதே எண்ணாகவோ
அல்லது அதற்கு நட்பு எண்ணாகவோ அமைக்க வேண்டும்.